Rasi Palan: கோடிகளில் புரளும் யோகம் பெறும் 2 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளன. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் பணக்கார யோகம் பெறும் 2 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

purattasi-maatha-palan-two-zodiac-signs-people-will-get-lots-money-and-good-benefits-during-this-pe

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் பணக்கார யோகம் பெறும் 2 ராசிக்காரர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு ராசி, லக்கினத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கும் வரை பணம், காசுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்திருப்பீர்கள். சந்தோஷம், சுகம் காணப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு வசீகரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்திருப்பீர்கள். இந்த மாதத்தில் சுக்கிரனும், கேதுவும் இணைவது நல்லதல்ல. மனைவியின் உடல்நலனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வர வேண்டிய பாக்கிகள், பணங்கள் வந்து சேரும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். நல்ல லாபங்கள் கிடைக்கும். முக்கியமான ஆவணங்கள், ஆர்டர்கள், மெமோக்கள் போன்றவை வரும் வாய்ப்புள்ளது. பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். கால் முட்டி, கால்கள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும்.

ரகசியத்தை ரகசியமாக வைத்து பாதுகாத்தால் 100க்கு 100 சதவீதம் கண்டிப்பாக வெற்றியைப் பெறுவீர்கள். சீக்ரெட்டை வெளியில் சொன்னீர்கள் என்றால் கட்டாயமாக அது நடக்காது. நல்லது செய்ய போய் பிரச்சனையில் சிக்கும் வாய்ப்புள்ளது. யாருக்கு உதவி செய்யப் போனாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும். பொய் சொல்லி உங்களிடம் பணத்தை வாங்கும் வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பது தான். முதலீடுகளில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். பெரிய பணங்கள் வைத்திருந்தால் அதை கொண்டு போய் சிக்க வைக்கும் நேரமாக உள்ளது. விரைய ஸ்தானத்துக்கும், குடும்ப ஸ்தானத்துக்கும் குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. காசு, பணத்திற்கு எந்தவித குறைவும் வராது.

லாபங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கையில் பணம் புலங்கிக் கொண்டே இருக்கும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். விட்டமின் கோளாறுகளால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. நம்பிக்கை உங்கள் மேல் அதிகம் வைக்க வேண்டும். எது வந்தாலும் அதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது நல்லது. 10 ஆம் இடத்திலேயே சுக்கிரன், கேது அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் இருக்கும் பெண் ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

வண்டி, வாகனங்கள், பேச்சுவார்த்தை பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்றாக இருக்கும். பிரத்யங்கரா தேவி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+