Purattasi month 2025: ரிஷப ராசிக்கு சுக்கிரன், புதன் அருளால் காத்திருக்கும் ஜாக்பாட்.. என்ஜாய்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதனாகிய சுக்கிரன் மற்றும் புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு, வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கு, லோன் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.
தெய்வீக பயணம்
புகழ்பெற்ற கோயில்களுக்கு இந்த மாதம் சென்று வருவீர்கள். மனதிற்குள் நிம்மதி, சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் கணவன், மனைவிக்குள் புரிதல் வர ஆரம்பிக்கும். நீண்ட காலமாக போக வேண்டும் என்று நினைத்த கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவீர்கள். குலதெய்வ கோயில்கள் கட்ட உதவுவீர்கள்.
சொத்து பிரச்சனை தீரும்
செவ்வாய் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பாகப் பிரிவினைகள் சமூகமாக முடியும் வாய்ப்புள்ளது. புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரம் இந்த மாதம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கெடுபிடி குறையும்
கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாக மருந்தை எடுத்துக் கொள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது. ராகு உங்களுக்கு வலுத்து இருப்பதால் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். லாபம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும்.
வழிபாடு
எல்லா விதத்திலும் வெற்றி பெற, நன்மைகள் நடக்க துர்க்கை அம்மனை வழிபடுவது நன்மை பயக்கும். திருநங்கைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கோதுமை தானம் கொடுப்பது இந்த மாதத்தில் அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications