Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு தொழில், பணவரவு.. அற்புதமான மாற்றம் நிச்சயம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொலு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்கள் பாக்கியாதிபதி, யோகாதிபதியாகிய புதன் உச்சம் பெற்றிருக்கிறார். பண வரவு, செல்வாக்கு இந்த மாதத்தில் அதிகமாகும். சூரியன் 12 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் கருத்து மோதல் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்குள் செவ்வாய் வந்து அமர்ந்திருப்பதால் கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
தூக்கம் முக்கியம்
முன்கோபத்தில் பேசும் நிலை ஏற்படும். சூரியன் 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளதால் தூக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. பொதுவாக இரவு நேரம் அதிகமாக கண் விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசியை குரு பகவான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் ஏற்படும். உங்கள் ராசிக்கு ஆதரவாக யோகாதிபதியான சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் விஐபிகள் அறிமுகமாவார்கள்.
தொழில் தொடங்கும் யோகம்
புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகள், அதற்கான பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க ஓரளவு நன்றாக இருப்பதால் அதிகமாக உழைப்பது, வேலைச் சுமை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சின்ன சின்ன பணப் பற்றாக்குறை இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவார்கள். ஆனால், கல்லாப்பெட்டியில் காசு வருவதில்லை என்கிற சூழல் இருக்கும்.
லாபம் அதிகரிக்கும்
கேது 11 ஆம் இடத்தில் இருப்பதால் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தைப் பொருத்தவரை இந்த மாதம் முழுவதும் நீங்கள் ஜெயித்துக் காண்பிக்கும் யோகம் உண்டாகும். சந்திரன் பலமாக அமர்ந்திப்பதால் சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். இந்த மாதம் முழுவதும் நல்ல விஷயங்கள் நடக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொட்டது துலங்குவதற்கான யோகம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் வேலைச் சுமை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஸ்ரீ மகா பிரத்யுங்கரா தேவியை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது, பச்சரிசி தானமாக வழங்குவது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications