மேஷத்திற்கு வரும் ராகு... துலாம் ராசிக்கு போகும் கேது - இந்த ராசிக்காரர்கள் கவனம்
ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சென்னை: ராகு கேது பெயர்ச்சி இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விஷேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

மேஷம்
மேஷ ராசி நண்பர்களே. இது வரை ராகு கேது இருந்த இடம் 2ல் ராகு. 8ல் கேது.. அது சுமாரான இடம் தான்.
"ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஜந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூ மேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே" என்ற யோகத்தால் எதையும் சாதிக்கும் வல்லமையை ராகு கொடுத்தார். இனி ஜென்ம ராசியில் ராகு பயணம் செய்யப்போகிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு, புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு ராகு வருகிறார். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்ச் மாதம் முதல் இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.
கேது 6ஆம் வீட்டிற்கு வருவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இப்போது ராகு 12ஆம் வீட்டிலும் கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்தது யோகத்தை செய்யகூடிய இடங்கள் தான். அஷ்டம சனி நடந்ததால் ராகு கேது செய்ய வேண்டிய யோகபலனை சனி கெடுத்து விட்டார். எந்த கிரகமும் நல்ல இடத்தில் செய்ய வேண்டிய யோகத்தை செய்யாமல் இருந்திருந்தால் அடுத்து இடத்திற்க்கு வரும் பொழது முந்தைய வீட்டின் யோகத்தை வாரி வழங்குவார்கள். இன்னும் சில மாதங்களில் சாதகமான இடத்திற்கு ராகு கேது வரப்போகிறார்கள். 11ஆம் வீட்டிற்கு வரப்போகும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டில் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். காரிய வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பும் அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வார்த்தைகளால் வஞ்சித்து ஏமாற்றியவர்களின் முகத்தில் கரியை பூசி விடுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் ஏற்படும். சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ல் கேது வரப்போவதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, 5ஆம் வீட்டில் கேதுவும் 11ல் ராகுவும் பயணிக்கின்றனர். மார்ச் மாதத்திற்குப் பிறகு நான்காம் வீட்டில் கேதுவும் 10ஆம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். உங்களுக்கு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும். கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும். கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஒத்திகைகக்கு வீடு மாறலாம். காலி மனைகள் வாங்கும் வசதி வரும். சென்ற காலங்களில் மறைமுக எதிர்ப்பு வேண்டாத விமர்சனங்களுக்கு ஆளாகி கெட்ட பெயர் எடுத்த நீங்கள் ,உங்களின் அருமை என்ன என்பதை புரிய வைப்பீர்கள். துடுப்பில்லாத படகு போல தத்தளிக்கும் உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். கோபப்படாமல் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications