For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2020: ராகு கேதுவுக்கு பிடித்தது பிடிக்காதது என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ராகுவும் கேதுவும் பித்ரு காரகர்கள்.
ராகு பாட்டனாருக்கு காரகத்துவம் என ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ராகு கேதுக்களுக்கு பிடித்தது எது நட்பு கிரகங்கள் பகை கிரகங்கள் பற்றி பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கு ஆட்சி வீடு என்ற நிலை இல்லை. சில பஞ்சாங்கங்களிலும் ஜோதிட நூல்களிலும் ரிஷப ராசியும் விருச்சிக ராசியும் ராகு கேதுவுக்கு உச்ச வீடு, நீச வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகு, கேதுவிற்கு சொந்த வீடுகள் இல்லை என்றாலும் தாங்கள் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படும். இந்த ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு கேது பயோடேட்டாவை பார்க்கலாம்.

Rahu Ketu Peyarchi 2020: Rahu and Ketu Biodata

ராகு பகவான் பயோடேட்டா

நிறம் - கருப்பு

தேவதை - பத்திரகாளி

பிரத்யதி தேவதை - சர்ப்பம்

இரத்தினம் - கோமேதம்

மலர் - மந்தாரை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - கொடி

தேசம் - பாபர

சமித்து - அறுகு

திசை - தென்மேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - கருங்கல்

வாகனம் - ஆடு

பிணி - பித்தம்

தானியம் - உளுந்து

காரகன் - பாட்டன்

ஆட்சி - சொந்த வீடு கிடையாது

உச்சம் - விருச்சிகம் நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - முழங்கால்

நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்

பால் - பெண்

திசைகாலம் - 18 வருடங்கள்

கோசார காலம் - 18 மாதங்கள்

நட்பு - சனி, சுக்கிரன் பகை - சூரியன், சந்திரன்,செவ்வாய்

சமம் - புதன், குரு உபகிரகம் - வியதீபாதன்

கேதுவின் காரகம்

ஜோதிடத்தில் முதன்மையான பலம் கொண்டவர் கேது. கேது நிழல் கிரகம். சர்ப்ப கிரகம். கேது ஞானகாரகன் முக்திக்கு வழிகாட்டுபவர். மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர். நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக வைத்திருப்பார். சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச் செய்யக்கூடியவர். பாப கிரகங்களுடன் சேரும் போது வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

Rahu Ketu Peyarchi 2020: Rahu and Ketu Biodata

கேது பகவான் பயோடேட்டா

நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - பிரம்மா

ரத்தினம் - வைடூரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குரூரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்ப்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்ளு

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - மீனம்

உறுப்பு - உள்ளங்கால்

நட்சத்திரங்கள் - அசுவினி, மகம், மூலம்

பால் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 1 வருடம்

நட்பு - சனி , சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

English summary
Rahu Ketu Peyarchi Today. Rahu and Ketu are chaya planets.Rahu and Ketu Pattanar is known in astrology as Karakattuvam. Let's see what the friendly planets are hostile planets which is the favorite of Rahu Ketu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X