ராகு கேது பெயர்ச்சி 2026: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் பெயர்ச்சி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறது, முன்னேற்றத்தை ஏற்படுத்துமா, கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயணித்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

rahu-ketu-peyarchi-2026-massive-changes-ahead-for-rishabam-rasi-people-in-this-rahu-ketu-peyarchi

சிம்ம ராசியில் இருந்த கேது பகவான் கடக ராசிக்குள் வருகிறார். கும்ப ராசியில் இருந்த ராகு பகவான் மகரம் ராசிக்குள் வருகிறார். இது உலக அளவிலும், தனிமனித வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு தொழில், குடும்பம், வேலை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு இதுநாள் வரை சுக ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் தைரிய ஸ்தானத்துக்கு செல்லும் நேரம். 3 ஆம் இடத்தில் கேது இருப்பது பெரிய விசேஷமான காலகட்டமாக இருக்கும். பெரிய அளவுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். எல்லா விஷயங்களிலும் தைரியமாக, ஆணித் தனமாக உங்களுடைய வாதங்களை முன்வைப்பீர்கள். கம்யூனிகேஷன் பவர்புல்லாக இருக்கும்.

சொத்துக்கள் வாங்கும் யோகம்

பழைய சொத்துக்களை விற்பதற்கான யோகமும், புதிய சொத்துக்களை வாங்குவதற்கான யோகமும் உண்டாகும். எந்த சொத்துப் பரிமாற்றத்தை செய்தாலும் அதன் சட்டப்பூர்வ ஆலோனைகளை கேட்டுக் கொள்வது நல்லது. 4 இல் இருந்து 3 ஆம் இடத்திற்கு கேது வருவதால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சில சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

பயணம்

இளைய சகோதரர்களுடன் கருத்து மாறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இளைய சகோதரர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு, சில பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. நிறைய ஆன்மீகப் பயணங்கள் அமையும். கோயில் குளங்களுக்குச் சென்று அமைதியான வாழ்க்கையை மேற்கொள்வீர்கள். குடும்ப உறவுகளில் இழப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. தாய் தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

பாக்கியத்தில் குரு

பாக்கிய ஸ்தானத்தில் ராகு அமர்வது விசேஷமாகும். வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் செல்வது, வேலை செய்வது போன்ற அமைப்பு உள்ளது. மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள். தொழில்நுட்ப படிப்பு எடுத்து படிப்பதற்கான அமைப்பு ஏற்படும். உங்கள் வாழ்க்கையை மிகவும் உயர்த்தக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

பதவி உயர்வு

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வளர்ச்சி ஏற்படும். லாப ஸ்தானத்தோடு ராகுவின் தொடர்பிருப்பதால் பெரிய வளர்ச்சியையும், பதவி உயர்வையும் கொடுக்கும். நீண்ட காலமாக வேலையில் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக பதவி உயர்வு கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். குழந்தைகள் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும்போது உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

5 ஆம் இடத்தோடு கேது தொடர்பு இருக்கும்போது குலதெய்வத்தின் அனுக்கிரகம் குறைவாக இருக்கும் என்பதால் குலதெய்வ வழிபாடுகளை சரியாக செய்வது நன்மை பயக்கும். ஆன்மீக ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும். தைரியம் அதிகரிக்கக்ககூடிய அற்புதமான காலகட்டமாக இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+