மேஷ ராசிக்கு வழி பிறந்தாச்சு.. எந்தெந்த விஷயங்களில் யோகம் கொட்டும்?.. முழு பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mesham-people-from-oct-19-to-25

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு குடும்பத்தில் துணைக்கு தேவையான விஷயங்களைச் செய்து கொடுப்பது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக பெரிய வெற்றிகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகலவிதமான கஷ்டங்களும் பரிபூரண நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

முன்னேற்றம்

வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்த பயணங்கள் அனுகூலத்தைத் தரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் பொறுமையாக செயல்படுவது நன்மையைத் தரும். ஆவேசப்படுவது, கோபப்படுவதைத்த தவிர்ப்பது நல்லது. உங்களை நேசிப்பவர்களிடம் நீங்கள் பழகுவது, அவர்களை அரவணைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.

பெரும் பணம்

தேவையில்லாதவர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் உங்களை காயப்படுத்தக் கூடும் என்பதால் கவனம் தேவை. குரு அருள் இருப்பதால் தெய்வ கடாட்சம் ஏற்படும். தெய்வ காரியங்களை செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பெரும் பண வரவு கிடைக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கடல் கடந்து நல்ல விஷயங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்திலும், தொழிலிலும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

அதிர்ஷ்டம்

ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். மற்றவர்கள் மூலமாக நிறைய நன்மைகள் நடக்கும். சுக்கிரன் வக்கிரமாக, புதன் சேர்ந்து ராசி லக்னத்தைப் பார்வையிடுவது பெரிய அதிர்ஷ்டத்தை தரும். அரசு சம்பந்தப்பட்ட, வில்லங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மனைவிக்கு யோகம் கிடைக்கும். மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு அரசு வேலை, மெடிக்கல் துறையில் வேலை போன்றவை கிடைக்கும்.

வழிபாடு

நிறைய பேருக்கு நல்ல இடமாற்றம் கிடைக்கும். இந்த வாரம் நிறைய பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஏற்றம். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம், நல்ல மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். நேர்மையாக இருக்க முயற்சி செய்வீர்கள். வரதராஜப் பெருமாள் வழிபாடு நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+