மிதுன ராசியினருக்கு ஜாக்பாட் வாரம்.. அரசு வேலை முதல் சொத்து யோகம் வரை.. அக். 26-ல் என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-mithunam-people-from-oct-26-to-nov-1

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான வாரமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், ராசியாதிபதி வக்கிரமாக இருக்கிறார். சுக்கிரன் வக்கிரமாக அமர்ந்திருப்பதால் நிறைய பேருக்கு காதல் உறுதியாகும். திருமண யோகம் உண்டாகும். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, சொத்துக்கள் விற்பது போன்ற யோகம் ஏற்படும். பெரும் பணங்கள் வந்து சேரும். அரசியலில் மாற்றங்கள் கொடுக்கும்

அரசு வேலை

அரசுத் துறையில் வேலை கிடைக்கும். அரசியலில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு மருத்துவத் துறையில் சேர்க்கும் அமைப்பு உள்ளது. பணப் பற்றாக்குறை, தட்டுப்பாடு நீங்கும். மிதுனத்தில் பிறந்த பலருக்கு திருமணம் நடக்கும். நிறைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரும் முயற்சிகள் எல்லாம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கும்.

யோக பலன்கள்

குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப காரியத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றமும், தொழில் மாற்றமும், உத்தியோக மாற்றமும், வியாபார மாற்றமும் யோக பலன்களை அதிகளவில் பெற்றுத் தரும். இதுவரை இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.

பேச்சில் கவனம்

உத்தியோகம், தொழில் ரீதியாக எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. மற்றர்களிடம் பேசும்போது கோபத்தோடு பேசுவதைத் தவிர்க்கவும். முழு உடல் பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும்.

ஆரோக்கியம்

வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் எச்சரிக்கை தேவை. பல் வலி, கண் வலி போன்ற பாதிப்புகள் நிவர்த்தியாகும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிப்பீர்கள். லாப ஸ்தானம் அபரிமிதமான வெற்றியைக் கொடுக்கும்.

வழிபாடு

26, 27, 28 ஆம் தேதிகளில் பெரும் லாபங்களை பார்ப்பீர்கள். மற்றவர்கள் மூலமாக நிறைய நன்மைகள் நடக்கும். சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு, லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+