Rasi Palan: மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பரில் வரப்போகும் குட்நியூஸ்.. கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான மிதுனம், கடக ராசிக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-kadagam-rasi-people-during-december-16-to-31

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். காதல் அமைப்பில் அனுகூலம் ஏற்படும். உங்களுடைய காதலுக்கு வீட்டில் பச்சைக் கொடி காட்டுவார்கள்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவி இருவரது உடல்நலனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளியிடத்தில் சந்தோஷம், அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் கோபப்படாமல் இணக்கமாகச் செல்வது நல்லது.

ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பானமாகன்களான ராகேவந்திரர், சங்கராச்சாரியார் போன்றோரை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் அனுகூலம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

2 ஆம் இடத்தில் கேது, 8 ஆம் இடத்தில் ராகு எனும் சர்ப்ப கிரகங்கள் இருப்பதால் கோளார் பதிகத்தைக் கேட்பது தடைகளை நிவர்த்தி செய்யும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மரண பயங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உறவுகள் மேம்படும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். வயிறு, ஜீரண உறுப்புகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+