108 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ரிஷப ராசிக்கு கட்டுக் கட்டாக பணத்தை அள்ளும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ரிஷபம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-on-next-108-days

வக்கிர கிரகம்

நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.

குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி, லக்கினக்காரர்களுக்கு லாப ஸ்தானம் 11 ஆம் இடத்தில் குரு நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்கிறார். சனி கர்மாவிற்கான காரகன், குரு ஜீவ காரகன். சனி குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது கண்டிப்பாக பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய சலுகைகள், சம்பள உயர்வுகள் கிடைக்கும். கடன்கள் அனைத்தும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

வாய்ப்புகள் தேடி வரும்

உங்களை விட்டுப் போன வாய்ப்புகள் எல்லாம் தேடி வரும். நடக்காது என்று சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் இப்போது நடக்கும். எதிலும் தன்னம்பிக்கையாக இருந்து ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஒரு சில விஷயங்கள் உங்களுக்குத் தானாகவே நடக்கும். நண்பர்களுடன் சண்டை போட்டிருந்தால் அவை சரியாகும். உத்தியோகத்தில் பெரிய மாற்றங்கள் கிடைக்கும்.

பண வரவு அதிகரிக்கும்

மூத்தவர்களுடன் சண்டை, சச்சரவுகள் இருந்தால் அவை சரியாகும். மூத்தவர்களுடன் நல்ல அந்நியோன்யம் உருவாகும். சொந்த பந்தங்களால் ஏற்பட்ட இடையூறுகள் நிவர்த்தியாகும். காசு, பணம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டுப் பத்திரங்கள் கைக்கு வரும். மூத்தவர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பிப்பீர்கள். வீட்டுப் பத்திரங்கள் கைக்கு வரும்.

சொத்துகள் சேரும்

அப்பாவுடைய குலதெய்வம், பூர்வீக சொத்துகளில் இருந்து வருமானம் வரும். சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில், வேலையில் இருந்து வர வேண்டிய பாக்கியங்கள் வந்து சேரும். அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு பணத்துக்கும், பொருளாதாரத்துக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த கவலையும் இல்லாமல் இருப்பீர்கள். பெரிய பதவி, கெளரவம், பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உண்டாகும்.

முயற்சிகளில் வெற்றி

அற்புதமான காலகட்டம் என்பதால் இப்போது எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி பெறும் யோகம் உண்டு. ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகளுக்கு படிப்புக்காக ஏதாவது உதவி செய்வது, வேத பாட சாலைகளுக்கு உணவுக்காக தானமாகக் கொடுப்பது ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+