சிம்ம ராசிக்கு அஷ்டம சனி.. அடுத்த 108 நாட்களில் வரப்போகும் ஆபத்து
மேஷம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணிக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி, லக்கினக்காரர்களுக்கு சனி பகவான் அஷ்டமத்தில் சஞ்சாரமாகிறார். சிலருக்கு சேவை சம்பந்தப்பட்ட புதிய உத்யோகம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும்.
சுப காரியங்கள்
சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு, மறுமணம் முயற்சியில் இருப்போருக்கு நல்லது நடக்கும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் நிறைவேறும். குழந்தை பாக்கியத்திற்கு முயற்சி செய்வோருக்கு திடீரென குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உருவாகும். ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது போல திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை திக்கு முக்காட செய்யும். உங்கள் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். தொழில் உள்ளிட்ட புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது சரியான காலம். நீண்ட காலமாக திட்ட விஷயங்களில் இறங்கினால் வெற்றி கிடைப்பது நிச்சயம்.
அஷ்டம சனி
அஷ்டமத்தில் சனி இருப்பதால் சிறிய சிறிய பாதிப்புகள் இருக்கும். நீங்கள் தவறு செய்யாமல், வேறு யாரோ செய்த தவறுக்கு தண்டனை வாங்கும் நிலை ஏற்படலாம். அதில் மட்டும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பணியில் நெருக்கடி அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். நைட் ஷிப்ட் பணி, ஓவர் டைம் பார்ப்பது அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
தூக்கமின்மை ஏற்படும். மனதில் பதற்றம், குழப்பம் ஆகியவை அதிகமாக இருக்கும். எதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், முதுகு வலி பிரச்சனை இருப்போர் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சென்று வழிபட்டு தேன் தானம் செய்து தேன் அபிஷேகம் செய்வதால் நன்மை உண்டாகும்.












Click it and Unblock the Notifications