ரிஷப ராசிக்கு 40 நாட்களில் வரும் ஆபத்து.. சூரியன், சந்திரன், கேது இணைவால் ஏற்படும் மாற்றம்
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி, லக்கினக்காரர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், கேது இணைவு. பஞ்சம ஸ்தானம் என்பது முதுகெலும்பு. நன்றாக இருப்பீர்கள் திடீரென முதுகெலும்பில் வலி, வேதனை ஏற்படும். அப்பாவுடைய பாட்டி, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. 5 ஆம் இடம் என்பது முதல் புத்திரன். அவருடைய உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
சூரியன், சந்திரன், கேது சேரும்போது நாம் சாப்பிடக்கூடிய உணவு பதார்த்தத்தில் தண்ணீரால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் கேது சேருமம்போது மூளையில் சில பாதிப்புகள், தலைவலி, ஒற்றை தலைவலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பதவி பறிபோகும்
சாப்பிடும் உணவே விஷமாக மாறும் தன்மை ஏற்படும். அதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி கட்டாயமாக பறிபோகும். இல்லையெனில் சட்ட சிக்கலில் சிக்கும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
சிவனுக்கு ருத்ராபிஷேகத்துக்கு கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். மாமனார், அப்பா, அப்பாவின் உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கட்டு தர்ப்பையை செம்பு பாத்திரத்தில் நெல், கோதுமையுடன் போட்டு தானமாகக் கொடுப்பது நல்லது. 100 சதவீதம் வெற்றிகள் ஏற்படும். பயம், குழப்பம் நீங்கும். எதிர்மறையான விஷயங்கள் நீங்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications