மீண்டும் மீண்டுமா.. விருச்சிகத்துக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. ஆனாலும் அதிர்ஷ்டமும் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் விருச்சிக ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

Rasi Palan Viruchigam

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் விருச்சிக ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை விரும்புபவர்களுக்கு நல்ல மாற்றத்தைத் தரும் காலமாக இருக்கும். குடைச்சலான சூழ்நிலையாக இருந்திருக்கும். சந்திரன் ராசியில் நீச்சம் பெறுவதால் சிறு சிறு மன காயங்கள் ஏற்படும். ஆனால், செவ்வாய் மனதை தைரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ராசிக்கு 4 ஆம் இடத்தில் சனி பகவான் இதுவரை இருந்தார். அஷ்டம சனியில் பாதி துன்பம், தற்போது சனி பகவான் 5 ஆம் இடத்துக்குப் போயுள்ளார்.

குரு பார்வை

சனியின் 5 ஆம் இடம் ஒருவிதத்தில் உங்களுக்கு யோகத்தைத் தரும். தனக்காரகன் குரு. பணம், குடும்பம், குழந்தை பாக்கியம், மன மகிழ்ச்சி, பூர்வ புண்ணியத்தில் ஏதாவது செய்யலாமா என்ற சிந்தனையைக் கொடுக்கக்கூடிய கிரகம். அந்த குரு இதுவரை உங்களுக்குச் சாதகமாக இருந்தார். ராசியை குரு பார்த்ததால் கஜகேசரி யோகம் இருந்தது.

தற்போது குரு 8 க்கு போவதால் எங்கோ உங்கள் பணம் சிக்கியது போன்ற நிலை இருக்கும். குழப்பமான சூழ்நிலையை குரு உருவாக்கியிருப்பார். அதே குரு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை கடகத்துக்கு வருவார். செப்டம்பருக்கு மேல் டிசம்பருக்கு மேல் அந்த நிலை மாறும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் சாதகமாக அமையும் வாய்ப்பை குரு கொடுப்பார்.

யோகம்

அதேசமயம் குரு பார்வை பலனால் சில நன்மைகளைக் கொடுப்பார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பெரிய நன்மைகள் உண்டாகக்கூடிய அமைப்பு உள்ளது. குரு பகவான் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சுக ஸ்தானத்தில் இருக்கும் ராகுவைப் பார்ப்பதால் வரும் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்கக் கூடிய யோகம் உண்டாகும். பெரிய பிரச்சனைகள் வரும். ஆனால் அதற்கு சரியான தீர்வும் கிடைக்கும்.

தொழில்

ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் கேது இருப்பதால் தொழில் விரிவுபடுத்தும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தனது மனைவி, குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் அந்த கடமை உள்ளது என்ற எண்ணத்தை உணரக்கூடிய விருச்சிக ராசியினருக்கு, 10 ஆம் இடத்தில் கேது அமரும்போது கடமையும், பொறுப்பு உணர்ச்சியையும் உங்களுக்கு கொடுப்பார்.

கேது

கேது 10 இல் இருக்கும்போது அது சூரியனுடைய வீடு என்பதால் உங்கள் அப்பா, அப்பா வழி உறவு, உங்கள் ஆளுமை, மனதைரியத்தை கொஞ்சம் கேது சீண்டி பார்ப்பார். வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் உண்டாவது போல இருக்கும். ஆனால் வந்துவிட்டு போயிரும் என்ற நிலைமை இருக்கும். கேது சில பிரச்சனைகளைக் கொடுத்தாலும் சிறு சிறு வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்ய செய்ய கேது உங்களுக்கு சாதகமாக அமைவார்.

திருமணம்

ராசிக்கு 7 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் உறவுகளுக்குள் மற்றும் காதலித்தவர்களை திருமணம் செய்பவர்களுக்கு, சனி சில பிரச்சனைகளையும், தடைகளையும் ஏற்படுத்துவார். சுய ஜாதகத்தை பார்த்து திருமணத்துக்கான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது. ஆவணி மாதத்தில் சுப காரியங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முதலீடுகளையும், உழைப்பையும் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் வழக்கு, பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+