ஜென்ம சனி மீனம் ராசிக்கு என்ன செய்யும்? - சனிப்பெயர்ச்சி பலன்கள்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 29 ஆம் தேதி) சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம் - மீன ராசிக்கு சனி பகவான் உங்களின் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் மூலம் ஜென்ம சனி தொடங்கவுள்ளது. சனி எப்போது எல்லாம் குருவின் வீட்டுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
முன்னேற்றம்
தடைபட்ட காரியங்கள் எல்லாம் நிவர்த்தியாகி முன்னேற்றத்துக்கான பாதையை நோக்கி பயணிப்பீர்கள். வீடு, பணி, தொழில் ஆகியவற்றில் நல்ல மாற்றங்கள் நிகழும். திருமண தடை விலகி இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
மாற்றங்கள்
இந்த காலத்தில் ஆன்மிக பயணங்கள் அதிகரிக்கும். அதேபோல இந்த காலத்தில் உங்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றத்துக்கு தகுந்த வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்து கொண்டால் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தடைகள் வந்தாலும் உங்கள் கடின உழைப்பை செலுத்தி முன்னேறி கொண்டே இருங்கள்.
குருவின் அருள் கிடைக்கும்
புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சிறப்பான காலம். இந்த வருடத்தை விட அடுத்தாண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். குரு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த போகிறார். தொட்டது துலங்கும் பொற்காலம். எதையும் தெளிவாக திட்டமிட்டு இறங்கினால் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.
மதிப்பெண்
தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 85 சதவீதம் சிறப்பாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
நல்லது நடைபெற்றாலும் அதில் சின்ன சின்ன குறைகள் இருக்கும். அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும். பணிச்சுமை, ஞாபக மறதி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். சில இடங்களில் மரியாதை குறைவு ஏற்படும். மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். யாருடனும் ஒப்பிடாமல் உங்களுக்கு கிடைத்ததை வைத்து நிறைவாக வாழ வேண்டும்.
பரிகாரம், வழிபாடு
வேப்பம் குச்சியை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். ராமேஸ்வரர் ராமர் பாதம், பர்வதவர்த்தினி வழிபாடு உங்கள் வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications