சனி பெயர்ச்சி 2023: அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனியால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சினை.. கவனம் தேவை
சென்னை: சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என்று ஜோதிடம் சொல்கிறது. சனிபகவான் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் அஷ்டம சனி காலமாகும். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டம சனி காலமாகும்.
சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். சனிபகவான் பார்வை அத்தனை கொடூரமானது என்பார்கள். சனிபகவானால் சிவபெருமானும், ராவணனும் பாதிக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒருகால் முடமான சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.
சுபகிருது வருடம் தை மாதம் 3ஆம் தேதி ஜனவரி 17,2023ஆம் ஆண்டு சனி பகவான் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் அஷ்டம சனியால் பாதிக்கப்படும் கடகம், அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடகம் அஷ்டமத்து சனி
அஷ்டமத்து சனி வரப்போகிறதே என்று அச்சமடையவேண்டாம். காரணம் கடக ராசிக்காரர்களுக்கு நிகழப்போகிற சனிப்பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. கண்டச்சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. சனி பகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால் நன்மையே செய்வார்.

குடும்பத்தில் கவனம்
உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

பண முதலீட்டில் கவனம்
வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சனிக்கிழமையன்று ஏழைகள் முதியவர்களுக்கு அன்னதானம் கொடுங்க. புதன்கிழமை பெருமாள் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி
விருச்சிகம் ராசிக்கு சனி நான்காம் வீட்டு அதிபதி. நான்காம் அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்ட சனியாக அமர்கிறார். ஆட்சி பெற்ற சனி நோய்களை வெளிப்படுத்துவார்கள். வண்டி வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். பத்தாவது பார்வையாக சனி பகவான் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. சனி யோகம். வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும்.

எதிரிகள் பிரச்சினை தீரும்
தொழில் பிசினஸ் பெரிய மாற்றம் வரும். வெளிநாடு பயணம் செய்யலாம். தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள். பயணங்களால் தன வரவும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். சனி பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் எதிரிகள் தொல்லைகள் விலகும். அம்மாவின் உடல்நலனில் இருந்த நோய்களை வெளிக்காட்டுவார். சிலரது நோய்கள் தீரும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு நன்மையான காலம். புதிய பயணத்தை ஏற்படுத்துவார். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications