Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எத்தனை வருஷமா கஷ்டப்பட்டு இருப்பீங்க? இனி பாருங்க! மகர ராசிக்கு சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

சனி அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.

Sani peyarchi rasi palan 2024 What is the Horoscope for Magara Rasi


இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.

சனிக்கு இருக்கும் பவர்; ஜோதிடத்தில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு பெரிய பலம் சனிக்கு உண்டு. அது சிறு நகர்வு. சனியின் சிறு நகர்வும் கூட ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் குணம் கொண்டது. சனி ஒருவரை தூக்கி வளர்க்கவும் செய்யவும்.. தூக்கி மிதிக்கவும் செய்யவும்.

சனி எந்த திசையில் செல்கிறார்.. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே வீழ போகிறதா என்று பார்த்து விடலாம். சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள், வீழ்ந்தவர்களுக்கு இருக்கிறார்கள். அப்படி பட்ட சனிதான் தற்போது வக்ர பெயர்ச்சி அடைகிறார் .

பலன்கள்; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். அடுத்த 1 வருடம் உங்கள் வாழ்க்கையில் சனி என்னவெல்லாம் செய்ய போகிறார் என்று பார்க்கலாம்.

மகர ராசிக்கு திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

மகர ராசிக்கு இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பணம் வரும்: வேலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்: வேளைகளில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.

புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.

படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+