சனிப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு வீடு, நகை, நிலம் வாங்கும் யோகம்.. கோடீஸ்வர யோகம் கொட்டப் போகுது
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஜென்ம சனி விலகுகிறது. இதுவரைக்கும் ஜென்மத்தில் இருந்த சனி விலகி பாதசனியாக மாறுகிறார். வயிறு, மன அழுத்தம், முதுகுதண்டுவடம், கால், பாதம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கும்பத்தில் ராகு வருவதால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
யாரிடம் பேசினாலும் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலன்களைத் தரும். உடற்பயிற்சி, ஆயில் புல்லிங், நீராகாரம் காலையில் அருந்துவது நல்லது. அனுகூலம், நம்பிக்கை ஏற்படும், அனைத்து விஷயங்களும் கைகூடுவதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபம் கூடாது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். பெற்றோர்களின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணை அல்லது துணைவியாரின் தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபம் அதிக அளவில் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை வாங்கும் யோகம் உண்டு. நிலம், மண், வீடு, நகை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. எதாவது ஒரு செல்வத்தை வாங்கிக் கொண்டே இருப்பீர்கள்.
சேமிப்பு, முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். ஆச்சரியப்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வார்த்தையில் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருக்கிறார். பிள்ளைகளை திட்டுவது, மற்றவர்களை திட்டுவது, சாபமிடுவது போன்றவற்றை செய்யும் சூழல் உருவாகும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
பாத சனி இருப்பதால் கால்களில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வீட்டில் செய்ய நினைத்த அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். குடும்பத்துடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். கோயில் திருப்பணி செய்வதற்கான வாய்ப்பு வரும். ஆன்மீக குருமார்களை சந்திப்பீர்கள்.
ஆச்சரியத்தக்க வகையில் முன்னேற்றம், லாபம், அனுகூலம் ஏற்படும். ஏற்றத்தின் அளவு பன்மடங்கு உயரும். தொழில் ரீதியான அனுகூலம் காணப்படும். தைரிம் ஏற்படும். கும்பம் இருக்கக் கூடிய வீட்டில் அனைத்து விதமான சுப காரியங்கள், அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்தி, அனுசரித்து செல்வது நல்லது. பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்வது நல்லது. யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
கும்ப ராசிக்காரர்கள் மூன்று மாதங்களுக்குள் திங்களூர் சென்று சந்திரன் கோயிலில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பசு நெய், விபூதி, குங்குமம், நல்லெண்ணைய் வைத்து வழிபட வேண்டும். அந்த விபூதி, குங்குமத்தை தினமும் பயன்படுத்துவது யோக பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications