சனிப்பெயர்ச்சி: 27 ஆண்டுக்குப் பின் அதிர்ஷ்டத்தை அள்ளும் மிதுன ராசி.. சனியின் அருளால் பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

Sani peyarchi Sani peyarchi palangal Midhunam

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பத்தாம் இடத்தில் வருகிறார். கர்ம சனி நடைபெறவுள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று சுவாமி வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். எதிரிகள் பிரச்சனை தீரும். சத்ரு பிரச்சனை தீரும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நிறைய தெய்வ காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைத்துவிதமான நல்லதும் நடக்கும். அனுகூலம் உண்டாகும். துணை அல்லது துணைவியாருக்கு இருந்து வந்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழில் அனைத்திலும் நல்லது நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் ஏற்படும் யோக காலமாக இருக்கும்.

பத்தாம் இடத்தில் பாவி இருப்பது பெரிய அனுகூலம், பெரிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சாதரணமாக இருந்த உங்களுக்கு எதிர்பாராத அனைத்து அதிர்ஷ்டங்களும் உண்டாகும். தைரியமாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 27 1/2 ஆண்டுகளாக பார்க்காத அனைத்து நன்மைகளையும் பார்ப்பீர்கள். இனி எல்லாவிதத்திலும் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

சுபகாரியங்களை உடனுக்குடன் செய்வது நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக சீக்கிரமே திருமணம் செய்வது நல்லது. அதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புத்திர சந்தான அனுகூலம், துணை அல்லது துணைவியார் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி உண்டாகும். கடல் கடந்த பயணம், வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டு. யோகமான காலமாக இருக்கும்.

மருந்து, மாத்திரைகளை சரியாக எடுக்க வேண்டும். தூக்கத்தை கெடுப்பது, மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை எடுத்து நன்றாக தூங்குவது நன்மை பயக்கும். கோயில் உழவாரப் பணிகளை மேற்கொள்வது, கோயில் கட்டுவது, ஆன்மீக பெரியோர்களை சந்திக்கும் நல்ல சூழல் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+