மிதுனத்துக்கு ராஜயோகத்தை கொடுக்கும் சனி.. பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு.. தொட்டதெல்லாம் துலங்கும்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்ததால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அஷ்டமாதிபதி, 8க்கு உரியவர். வலி, வேதனை, துக்கம், துயரம், எதிர்பார்க்காத விஷயங்கள், திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய இடம். பாக்கியத்தை தரக்கூடியவரும் சனி பகவான் தான். தற்போது தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து வக்கிரமாகி உங்களுக்கு சனி பலனைக் கொடுக்கப் போகிறார். வக்கிரம் என்பது இயல்புக்கு மாறிய தன்மை என்பதால் இதுவரை வலி, வேதனைகள், இடைஞ்சல்களையும் கொடுத்து வந்த சனி பகவான் இனி அதிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிப்பார்.
தொழிலில் யோகம்
வரும் காலகட்டத்தில் உங்களுக்கு நன்மையைத் தரும் காலகட்டமாக இருக்கும். தொழில் விஷயத்தில் இருந்து வந்த அழுத்தம் நீங்கும். தொழிலில் நல்ல லாபம், முயற்சிகள் பலிக்கும் காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்துகொள்ளும் காலகட்டம். கொடுத்த வேலைகளை திறம்பட செய்து முடித்து, அதன் மூலம் வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
வேலைவாய்ப்பு
புதிய வேலை, படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் போடுவது, அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் சிறப்பு பெறும் நேரமாக இருக்கும். சனி 3 ஆம் பார்வையாக 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மன நிறைவைக் கொடுக்கும். முதலீடுகளில் இருந்து வந்த காரியத் தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். நல்ல முதலீடு கிடைக்கும்.
வெளிநாடு யோகம்
தாம்பத்திய சுகம், தூக்கம், சுகம் ஆகியவற்றில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விசா, ஏற்றுமதி இறக்குமதியில் அனுகூலம் ஏற்படும். 7 ஆம் பார்வையாக 4 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், நிம்மதியற்ற சூழல் அனைத்தும் மாறும். வாகனம் வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகும்.
திருமண யோகம்
சனி 10 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி, திருமண யோகம் கைகூடி வரும். எதிர்பார்த்த வரன் அமையக்கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் ஏற்படும். மக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். திருமணம் நடக்கும், கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நல்ல பாக்கியம் கிடைக்கும். தந்தைக்கு நல்லது நடக்கும். அவர்களுடைய உடல்நிலை சரியாகும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனை அனைத்தும் தீரும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications