கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. கடக ராசிக்கு சனியின் அருளால் சூப்பர் ஜாக்பாட்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 8, 7க்கு உரியவர். தற்போது 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறார். இதுவரை பாக்கியமே கிடைக்கவில்லை என்பவர்களுக்கு இனி பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கடந்த 2 1/2 வருடங்களாக அனைத்து விஷயங்களிலும் இதுவரை வலியோடு இருந்து வந்தவர்களுக்கு நன்மைகளைச் செய்ய காத்திருக்கிறது. எதிர்ப்பு, பகை, திருமணத் தடை, பாக்கியத் தடை, தொழில், வியாபாரத்தில் பிரச்சனையோடு இருந்தவர்களுக்கு எல்லாம் இனி நிம்மதி தரும் காலகட்டமாக இருக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
வக்கிரம் என்பது இயல்புக்கு மாறான நிலை. இதுவரை தொல்லை கொடுத்து வந்த சனி இனி பாக்கியத்தைக் கொடுக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இனி மனதில் திடம் ஏற்படும். நிதானம், பொறுமை, மந்தம் அனைத்தும் சுறுசுறுப்பாக மாறும். சனியின் காரகத்துவங்கள் அனைத்தும் உங்களுக்கு தலைகீழாக மாறும். பிடிவாத குணத்தை விடுவீர்கள். நீண்ட நாட்களாக திருமண விஷயத்தில் பாதிப்புச் சந்தித்து வருபவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். திருமணமானவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
திருமண யோகம்
திருமண வாய்ப்புகள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். பிரிந்திருந்த கணவன், மனைவி சேர்ந்திருக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குணமாகும். நல்ல மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். கடந்த இரண்டரை வருடங்களாக வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகம் ஏற்படும். வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்வு அல்லது விடுதலை கிடைக்கும்.
லாபம்
கடனால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் கடனிலிருந்து விடுதலை, கடன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வீடு, வண்டி, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கடகத்துக்கு கெடுதலைச் செய்யக்கூடிய கிரகம் சனி. இப்போது வக்கிரமாக சனி இருப்பதால் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுப்பார். தொழில், வேலை, வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். லாபத்தை அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு அரசாங்க உத்தியோகம், மனம் தெளிவு பெறும் நிலை என அனைத்திலும் நன்மை பெறும் காலகட்டமாக இருக்கும். நிறைய மாற்றங்கள் உண்டாகும். குடும்பம், பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
-
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications