கடக ராசியினரை வச்சு செய்யப் போகும் சனி.. நண்பரால் வரப்போகும் பிரச்சனை.. ரொம்ப கவனம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி, லக்கினக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் அடுத்த 5 மாதத்துக்குள் நடக்கப் போகிறது. லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள நிலையில் வரும் ஒன்றரை மாதத்தில் நீங்கள் நண்பர் என நினைத்த நபரால் பெரிய ஆப்பு வரப்போகிறது. கால் முட்டி தொடர்பான பிரச்சனைகள் வரும். ஆண், பெண் நண்பர்களை வீட்டுக்குள் விடுவதால் பெரிய பாதிப்புகளைச் சந்திப்பீர்கள்.
ஏமாறும் சூழல்
பணத்தை தொலைப்பதற்கான சூழல் ஏற்படும். வட்டிக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாறும் சூழல் ஏற்படும். வாழ்க்கை முழுவதும் சம்பாதித்த பணத்தை இழக்கும் சூழல் இருப்பதால் மிகுந்த கவனம் தேவை. உங்கள் ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் எதிர்பார்க்காத பணங்கள் எல்லாம் உங்கள் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
பாதிப்பு
3 ஆம் இடம் எனும் உபஜெய ஸ்தானத்துக்கு ஜூலை 27 ஆம் தேதி செவ்வாய் போகிறார். இதனால் 45 நாட்களுக்கு உங்களை பயங்கரமாக வச்சு செய்வார். மனம், அண்டை வீட்டார், கைகள், இளைய சகோதர, சகோதரிகளால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விரல்களில் அடிபடும் சூழல் உள்ளது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
பிரச்சனை
நான் பெரியவன் என்ற மனநிலையை விட்டுவிடுவது நல்லது. நல்ல விஷயம் பேச போனாலும் தவறாகப் போவதற்கான வாய்ப்புள்ளது. ஆண்களால் தொல்லை வருவதற்கான வாய்ப்புள்ளது. போனில் பேசுவதன் மூலம் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் இருந்து வெளியில் செல்லும் சூழல் உள்ளதால் கவனம் தேவை.
இடங்கள் விற்கும்
கைகள், கழுத்து, விரல்கள், பிடிப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் விற்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த இடங்களை விற்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணமாகாத சகோதரருக்கு திருமண யோகம் உண்டாகும். மிக முக்கியமான நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
வாகனங்களில் கவனம்
ஐடி, கல்வித் துறை, அரசு, மத்திய அரசு, அஞ்சலகங்களில் வேலை செய்வோர் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கோர்ட், போலீஸ், விஜிலென்ஸ் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. கடகத்தில் பிறந்த நபர்களுக்கு 4 முதல் 5 மாதங்களுக்கு மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
வழிபாடு
உக்கிர நரசிம்மர் வழிபாடு நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும். நரசிம்மர் ஸ்லோகம் சொல்வது நல்ல பலன்களைத் தரும். சிவில் சர்வீஸ், உயர் அதிகாரிகள், பத்திரப் பதிவுத் துறை, ஈபி, நெடுஞ்சாலைத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
-
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications