சனி வக்ர பெயர்ச்சி: மேஷ ராசிக்கு விவாகரத்து வரை செல்லும் வாய்ப்பு.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
சனி விரைய ஸ்தானம் எனும் 12 ஆம் இடத்தில் வக்கிரமாகிறார். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், தேவையில்லாத வாக்குவாதங்கள், பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கண், முகத்தில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவியின் உடல்நிலையில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவருக்கு கண் சிகிச்சை, பல் பாதிப்பு, தலை தொடர்பான பிரச்சனைகள், பணத்தை பெண்ணிடம் கொடுத்து ஏமாறுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பண விஷயத்தில் ஜாக்கிரதை
மற்றவர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இடமாற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கால், பாதம், கொழுப்பு அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் அமருவதால் உங்கள் எதிரிகளின் பாதிப்புள் ஓங்கும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் உங்கள் எதிரிக்கு பாதிப்பு ஏற்படும். போலீஸ் கேஸ், வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
இடம் வாங்குவது, வீடு வாங்குவது, வீடு வாங்க கடன் வாங்கும் விஷயங்களில் சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாங்கும் வீடு, நிலத்தில் ஆவணம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக போகும்போது பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. மேஷ ராசியினர் முருகர் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
விவகாரத்து வரை போகும்
குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் விவகாரத்து வரை செல்லும் வாய்ப்புள்ளது. வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு அதன் மூலமாக பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு கட்டுவது, பெரிய வீடு கட்டுவது, மெடிக்கல் கல்லூரியில் சீட் கிடைப்பது, மருத்துவராக மாறுவது, போட்டித் தேர்வுகளில் ஜெயிப்பது, குரூப் 4 ரிசல்டில் தேர்ச்சி பெறுவது என அமோக பலன்களை காண்பீர்கள்.
வழிபாடு
பெரிய பொறுப்பு, பதவி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி வேறு ஊருக்குச் சென்று வேலைக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். இந்த ஆடி மாதம் மேஷ ராசிக்கு பெரிய நல்ல பலன்களை கொடுக்காது என்பதால், ஆரோக்கியம் மற்றும் மற்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சுப்பிரமணியர் வழிபாடு ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும். அடுத்த 6 மாதத்துக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications