Kanni: ஒரே மாதத்தில் இத்தனை யோகமா?.. கன்னி ராசிக்கு செப்டம்பர் செம மாஸ்!

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த கிரக மாற்றம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

30 நாட்களுக்கு ஒருமுறை சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொருக்கு ராசிக்கு மாறுகிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை செவ்வாயும், 20, 25, 28 நாட்களுக்குள் சுக்கிரனும், புதனும் மாறுகிறார். இந்த 4 கிரக நிலைகளைக் கொண்டு மாதாந்திர பலன்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த செப்டம்பர் மாதத்தில் 2 ஆம் தேதியிலேயே சுக்கிரன் ஆட்சி, 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் உச்சம் என்கிற நிலை அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.

september-matha-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-in-this-month

கன்னி, துலாம், மகரம், கும்பம், 6 ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். கன்னி, சிம்மம், தனுசு, மீனம் ராசியினருக்கு செவ்வாயின் நீச்சபங்க ராஜயோகத்தினால் நல்ல பலன்களை அடைவார்கள். பெரும்பாலும் 12 ராசிகளுக்கும் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு உன்னதமான பலன்கள் கிடைக்கும். 12 ராசிகளில் மிகப்பெரிய நன்மைகளை அனுபவிக்கப் போகும் ராசியாக இந்த கன்னி ராசி அமையும். ராசிநாதன் ராசியிலேயே உச்சமடைகிறார். செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு ராசிநதான் ராசியில் உச்சம் அடைவது, 2 ஆம் இடத்தில் மாதம் முழுவதும் சூரியன் ஆட்சியாக இருப்பது அற்புதமான பலன்களைத் தரும்.

பிரச்சனைகள் நீங்கும்

கடந்த மாதத்தில் கணவன், மனைவிக்கிடையே, காதலன், காதலிக்கிடையே பிரச்சனைகள், பிரிவு போன்றவை ஏற்பட்டிருக்கும். ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கும். இந்த செப்டம்பர் மாதத்தில் அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பம், காதல் போன்ற விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.

நீசபங்க ராஜயோகம்

10 இல் தசம அங்காரக எனும் நிலைமையில் செவ்வாய் இருக்கிறார். செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் 11 ஆம் இடத்தில் குருவுடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். இது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். 11 ஆம் இடம் நன்றாக இருக்கிறது. 6 ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். 7 இல் இருக்கும் கண்டகச் சனியை உச்ச குரு பார்க்கிறார். மிகப்பெரிய யோகம் ஏற்படும்.

திருமண யோகம்

எதையும் சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குழப்பமாக இருந்த தன்மை நீங்கி தெளிவு பெறுவீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். குடும்பம் நன்றாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவி போட்டிருந்த வழக்குகள் எல்லாம் சமாதனமாக முடியும் மனமாற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணையை காணக்கூடிய யோகம் ஏற்படும்.

தொழில்

ஆவணி மாதத்திலேயே திருமணத்தை உறுதி செய்யும் அமைப்பு ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வியாபாரம், தொழில், வேலை மூலம் இதுவரைக்கும் இல்லாத அளவு சம்பள உயர்வு ஏற்படும். வருமானங்கள் வரும். 2 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பெண்கள் சார்ந்த தொழில் அமைப்புகளை் கொண்டவர்களுக்கு, டெக்ஸ்டைல், டிராவல்ஸ் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+