கன்னிக்கு கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. முயற்சி முக்கியம் பிகிலு
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான செவ்வாய் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் நிலை பலமாக இருந்தால் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை அடைவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய் என்பவர் காலபுருஷனுக்கு லக்னாதிபதி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி அடைகிறதென்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் செவ்வாய் பகவான். வெற்றிகளை குவிக்கக்கூடிய நாயகன்.

செவ்வாய் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அந்தப் பெயர்ச்சி பலனுக்குத் தகுந்தாற்போல் உங்கள் முயற்சிகள் இருக்கும். அதில் வெற்றி, தோல்வி அடைவதற்கு கண்டிப்பாக செவ்வாயால் தான் நிர்ணயிக்கப்படும். ஒரு விஷயத்தை அடைவதற்கு அதாவது தொழிலில், வேலையில், திருமணம் சார்ந்த விஷயங்களில், குழந்தை தொடர்பான விஷயங்கள் என அனைத்திற்கும் செவ்வாய் மிகவும் முக்கியம்.
அலுவலகத்தில் உயர் பதவி, உயர் அந்தஸ்து வருவதற்கு ஆளுமைத் திறன் மிக்க நபராக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு லக்னாதிபதியாக செவ்வாய் பகவான் வருகிறார். செவ்வாயின் பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருந்து பலனைத் தரப் போகிறார். 12 என்பது விரைய ஸ்தானம். பண விரையங்கள் ஏற்படக்கூடிய முக்கிய நேரமாக இருக்கும். நிறைய செலவுகள் ஏற்படும். ஆனால் அந்த செலவுகளை வரவாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உங்கள் கையில் தான் உள்ளது.
சுபச் செலவுகள்
உங்களுக்கு வரும் பணத்தைக் கொண்டு முதலீடு செய்வது, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, நகை வாங்குவது போன்ற சுப விரையங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. சேமிப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள சரியான நேரமாக இருக்கும். உங்களுடைய கடன்களை தீர்ப்பதற்கான அதிக உழைப்புகளைக் கொடுக்க வேண்டிய காலமாக இருக்கும்.
முயற்சி முக்கியம்
அதிக முயற்சிகள் செய்வதன் மூலம் விரையங்கள், செலவுகள் இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். நிறைய போட்டி, பொறாமைகள் இருக்கும். கன்னி ராசி போட்டி போட்டு ஜெயிக்கக்கூடிய காலமாக இருக்கும். வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். செவ்வாய் 4 ஆம் பார்வையாக மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார். முயற்சிகள் வெற்றி அடையும்.
தொழில்
7 ஆம் பார்வையாக 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள், உயர்கல்விக்கான தேர்வுகளில் வெற்றி உறுதியாகக் கிடைக்கும். வெளிநாடு பயணங்கள், வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். கணவன், மனைவி, குழந்தைகளால் உங்களுக்கு வந்த வாய்ப்புகள், தொழிலை இழந்து தோல்வியை சந்தித்திருப்பீர்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு குடும்பத்தினருக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு உங்களுக்கு வரும், வாய்ப்புகளையும், தொழிலிலும் நல்ல முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
திருமண யோகம்
8 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கண்டிப்பாக நடக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அதே நேரத்தில், இடம் சம்பந்தமான நீதிமன்றம், வம்பு, வழக்குகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் அமைப்பு உண்டாகும். ஆனால் அதற்கு கட்டாயம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
-
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications