Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புரோமோஷன் கன்ஃபார்ம்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தடைபட்டுக் கொண்டே இருந்த இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அனுகூலம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கடன்களை அடைக்க அனைத்து வகையிலும் உதவிகள் கிடைக்கும்.
அனுபவமே ஆசான்
ரத்தபந்த உறவுகள், பெற்றோர், பெரியோருடன் இருந்த மன கஷ்டங்கள், பாரங்கள் அனைத்தும் தீரும். துணை மற்றும் காதல் அமைப்பில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கடந்த காலகட்டத்தில் யார் நல்லவர்கள், யார் உதவி செய்வார்கள் என்பதை அனுபவப்பட்டிருப்பீர்கள். அதற்கேற்றவாறு இனிவரும் காலத்தில் நல்லவர்களை அரவணைத்துக் கொள்வது நல்லது.
மகிழ்ச்சி
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாகனங்களில் புதிய அமைப்பு உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பதவி உயர்வு
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய உத்தியோகம் கிடைக்கும். புதிய படிப்புகளை படிப்பீர்கள். தொலைதூர பயணங்கள் வந்தால் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. தெய்வ மந்திரங்களை, பாடல்களைக் கேட்பது நன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
