Simmam Rasi Palan: விடாமுயற்சியால் வெற்றி பெறும் சிம்ம ராசி.. பேச்சில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

simmam-rasi-palan-what-kind-of-benefits-will-get-simmam-rasi-people-during-this-surya-grahan-period

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் எனும் 2 ஆம் இடத்தில் சூரியகிரகணம் நடைபெற்றுள்ளது. சூரியன், சந்திரன், அமாவாசை திதி, கேது விரஸ்தமாகிறது. குடும்ப ஸ்தானத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கையில் பணம் வைத்திருந்தால் யாராவது உங்களிடம் பேசி பணத்தை வாங்கிச் செல்லும் வாய்ப்புள்ளது. அல்லது மறதியினால் பணத்தை வேறு எங்காவது வைக்கும் சூழல் உண்டு.

சிக்கலில் சிக்கும் வாய்ப்பு

நல்லதுக்காக எதார்த்தமாக சொன்ன விஷயமே குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. யாரோ ஒருவருக்காக பேசி பெரிய பிரச்சனைகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன், சந்திரன் கேது இணைவு என்பது நல்ல காலகட்டம் இல்லை. தாயின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண் திடீரென சிவப்பு நிறமாக மாறும்.

ஆரோக்கியம்

குளுகோமா அறுவை சிகிச்சை, புரையினால் பாதிப்பு, வலது கண் திடீரென வீங்கும் நிலை உண்டு. இந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தானியங்களில், உணவு சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. கேது சேரும்போது பல், கண், மூக்கு நாசி போன்றவற்றில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

சுய சிந்தனை

வாழ்க்கைத் துணையின் மறைவுப் பகுதிகளில் பிரச்சனை, முதுகு வலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதை தவிர்க்க வேண்டும். சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். ராசி, லக்கினத்தில் கேது இருக்கும்போது நல்லவர்கள் போல பேசி உங்களை வீழ்த்தும் சூழல் ஏற்படும். அதனால் தெளிவான முடிவுகளை எடுப்பது நல்லது.

வழிபாடு

எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. சுய அறிவு, தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுவது ஜெயத்தை ஏற்படுத்தும். ராஜகணபதி வழிபாடு உங்களுக்கு மாற்றத்தையும், நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். விநாயகரை ராஜகணபதியாக மாற்றி பூஜை செய்யக்கூடிய வேத விற்பன்னர்களுக்கு தான, தர்மம் செய்வது நன்மையைத் தரும். கோதுமை, நெல், செம்பு பாத்திரம், தட்சணை வைத்து வழிபடுவது மேன்மையை உண்டாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+