சோபகிருது தமிழ் புத்தாண்டு..பகை விலகும்..நாடு செழிக்கும்..சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்
மதுரை: நாட்டில் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும், அண்டை நாடுகளுடனான பகை விலகி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் வாழ்வார்கள் என சோபகிருது வருடத்திய தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைத்துறையினர் வணிகத்துறையினர் வளர்ச்சியடைவார்கள் எனவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்திய வெண்பா

சோபகிருது தன்னிற் நொல்லுவதெல்லாம் செழிக்கும்
கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்
உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகுமன்றே யுரை
இந்த வெண்பாவின் பொருளை பார்த்தால் சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பழம்பெரும் ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் சுபிட்சம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும். உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது பெய்யும் எல்லா நலன்களும் பெற்றும் மக்கள் வாழ்வர் எனவும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். காரியத்தில் வெற்றி பெறுபவர்களாகவும் அழகானவர்களாவும் அடக்கமானவர்களாவும் மங்களகரமான காரியங்களை செய்பவர்களாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. ஸஸ்யாதிபதியாக சந்திரன், ரஸாதிபதியாக புதன்,நீரஸாதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகின்றனர்.
சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ரஸாதிபதியாகவும் வருவதனால் மத்திய, மாநில அரசுகளினால் நாட்டில் கல்வி கலைகள் செழிக்கும். திரை கலைஞர்கள் ஏற்றம் காண்பார்கள். காமெடி நடிகர்கள் நன்கு வளர்ச்சியடைவார்கள். பச்சை நிற பயிர்கள் அபிவிருத்தி அடையும்.தேவையான அளவு மழை பொழியும். ஜோதிடத்துறை, புள்ளியியல் துறை,வணிகவியல் துறை நன்கு வளர்ச்சியடையும். இந்த ஆண்டு 4 புயல் சின்னங்கள் உண்டு. கடலோர மாவட்டங்கள் புயலினால் சேதமடையும். உப்பு உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் மருத்துவ துறையில் முடக்கம் ஏற்படும். உயிர்காக்கும் மூலிகைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும்.
மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் காணும். விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், சுபிட்சத்துடனும் வாழ்வார்கள். பட்டு சேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.
சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் நாட்டு எல்லையில் இருக்கும் போர் பதற்றம் விலகும். அண்டை நாடுகளுடனான பகை விலகி நேசக்கரம் நீட்டுவார்கள். நாட்டில் சமரச சன்மார்க்க நெறி வளர்ச்சியடையும். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள். நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கும்.
ஸஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சந்திரன் வருவதால் மக்கள் சுகபோகமாக வாழ்வார்கள். வெள்ளி விலை ஏறும். நெல் உற்பத்தி அதிகரிக்கும்.
தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் வளர்ச்சியடையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். கரிசல் மண் பூமியில் விளையும் பயிர்கள் விருத்தியாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications