சுக்கிரன் பெயர்ச்சி: வீடு, கார், பணம் கடக ராசிக்கு அள்ளி கொடுக்கும் சுக்கிரன்.. வாயில தான் கண்டமே
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 4க்கு உரியவர் சுகத்தை தரக்கூடியவர். வீடு, வாகனம், வண்டி, லாபத்தை தரக்கூடியவராக இருக்கிறார். சுக்கிரன் ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் வந்து அமர்கிறார். 10 ஆம் இடத்தில் இருந்து சுக்கிரன் சமசப்தம பார்வையாக 4 ஆம் இடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் தாயின் ஆரோக்கியம் மேம்படும். தாயினுடைய சொத்துகள் உங்களுக்கு கிடைக்கும். தாய் சார்ந்த, தாய் வர்க்கம் ரீதியாக இருக்கும் உறவுகளிடம் நல்ல உறவைப் பேணுவீர்கள்.
அதிர்ஷ்டம் கொட்டும்
வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் ஜூன் 12 முதல் 25 ஆம் தேதி வரை தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதால் வலிமையாக இருக்கும். அந்த சமயத்தில் வீட்டை புனரமைப்பது, வீடு வாங்குவது, வீட்டுக்கு கிரகப்பிரவேஷம் செய்வது போன்ற அத்தனை விஷயங்களும் செய்வதற்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ஆசைப்பட்ட வாகனத்தை வாங்கி மகிழக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
சொத்துகள் சேரும் யோகம்
கடந்த சில ஆண்டுகளாக உங்களுக்கு மனது சரியாக இல்லாமல் இருந்திருக்கும். விரும்பிய பொருளை வாங்க முடியாமல் போயிருக்கும். வாங்கினாலும் ஏதோ ஒரு பிரச்சனை என்று இருப்பீர்கள். ஆனால், இனி உங்களுக்கு நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும். சுகபோகங்கள், அசையும், அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். விவசாயத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் இல்லாமலும், மகிழ்ச்சி இல்லாமலும் இருந்திருக்கும். மனக் குழப்பத்திலேயே இருந்திருப்பீர்கள்.
பேச்சில் கவனம்
இனி வரும் காலத்தில் சுக்கிரப் பெயர்ச்சிக்குப் பிறகு தன்னம்பிக்கை ஏற்படும். விளைவித்த பொருள்கள் மூலம் கணிசமான லாபத்தை அடைவீர்கள். எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்ற ஞானத்தைப் பெறுவீர்கள். மே 30 ஆம் தேதியில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் கேதுவுடைய நட்சத்திரத்தில் பயணிப்பதால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில், கொடுக்கல், வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
காதல் நல்லது
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரணையாகச் செல்வது நல்லது. கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாக்கு வாதத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
வெற்றிகள் கிட்டும்
ஜூன் மாதம் 25 ஆம் தேதி சுக்கிரன், சூரியனின் நட்சத்திரத்தில் பயணிக்கவுள்ளார். சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார விஷயங்களில் இரட்டிப்பு தன்மை, லாபம், மனமகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். எண்ணியவை நடக்கும். தொழில் மாற்றங்கள் கிடைக்கும். பதவி உயர்வு, நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். படித்த படிப்புக்குண்டான அனுகூலம் கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications