சுக்கிரன் பெயர்ச்சி: மிதுன ராசிக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்.. பணத்தை மூட்டையில் கட்டும் யோகம்
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு 5க்கு உரியவனாகவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதியாகவும், பஞ்சம ஸ்தானத்துக்கு அதிபதியாகவும், 12க்கு உரியவராக சுக்கிரன் உள்ளார். தற்போது சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது நல்ல தன்மையாகும். அதீத சுக போகங்களை அள்ளித் தரக்கூடிய அமைப்பாக உள்ளது. மிதுனத்துக்கு சுக்கிரன் யோகாதிபதியாக இருப்பதால் மன மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்துக்கு எவ்வித குறைபாடும் இருக்காது.
தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்பாக இருக்கும். உங்கள் ராசியதிபதியான புதனும் ஆட்சி பலத்தோடு வலிமையாக இருந்து அங்கு குரு என்கிற சுபக்கிரகம் இருப்பதால் உங்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்யக்கூடிய அத்தனை அமைப்பும் உள்ளது. தொட்டது துலங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் ஆகும். 5 என்பது பூர்வ புண்ணியம். கடவுளுடைய பரிபூரண அனுக்கிரகம் உங்களுக்கு உள்ளது.
11 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் 5 ஆம் இடத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறது. குருவும் 5 ஆம் இடத்தைப் பார்த்து புனிதப்படுத்துகிறது. 5 என்பது பதவியைக் கொடுக்கக்கூடிய இடம். யாரெல்லாம் வேலையில் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் கட்டாயமாக பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும்.
கடவுளுடைய அனுக்கிரகம் உள்ளதால் கோயில்களுக்கான திருப்பணிகளைச் செய்யும் யோகம் உண்டாகும். குழந்தைகளுடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியாகும். குழந்தைகள் நன்றாக படிக்கக்கூடிய தன்மை, நினைத்த படிப்பு கிடைக்கும் தன்மை உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். நீங்கள் விரும்பிய துறையை எடுத்து படிப்பீர்கள்.
நல்ல உறவு கிடைக்கப் போகிறது. நீண்டநாட்களாக எதிர்பார்த்த உறவுகள், குழந்தைப் பேறு உண்டாகும் காலகட்டம். 5 ஆம் அதிபதி, குருவும் 5 ஆம் இடத்தை புனிதப்படுத்துவதால் அற்புதமான குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுக்கிரன் காதல் ஸ்தானத்தை பார்ப்பதால் காதல், காதல் உறவு கைகூடக்கூடிய மாதமாக இருக்கும். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள் ஒன்று கூடும் காலகட்டமாக இருக்கும்.
பெண்களால் நன்மைகள், ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு அருமையான மாதமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அழகு சம்பந்தப்பட்ட துறை, ஜவுளி, ஹோட்டல் துறையினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும்.
ஜூன் 13 முதல் 25 ஆம் தேதி வரை பொற்காலமாக இருக்கும். சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரத்தில் பிராயணிப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வெளிநாட்டு நபர்களால் ஆதாயம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications