Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன ராசிக்கு குபேர யோகம்.. சொத்துகளைக் குவிக்கும் நேரம்.. தொட்ட காரியங்கள் எல்லாம் இனி ஜெயம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பெயர்ச்சியால் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

sukkiran-peyarchi-2025-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-period

சுக்கிரன் பெயர்ச்சி

நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.

மீனம் ராசி பலன்

மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்த சுக்கிரன் தற்போது 2 ஆம் இடம் என்று சொல்லக்கூடிய வாக்கு, குடும்பம், தன ஸ்தானத்தில் வந்து அமருகிறார். மீனத்துக்கு சுக்கிரன் தைரிய வீரியத்தைக் கொடுக்க கூடியவர். தன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணத்தை அதிக அளவில் கொடுப்பார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலமாகப் பணம் வரும்.

திருமண யோகம்

வியாபாரம், பயணங்கள், சகோதர, சகோதரிகள் மூலமாக தன வரவு உண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். சுக்கிரன் தன் வீட்டை தானே பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பண வரவு உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். திருமணத்திற்குப் பிறகு வரும் புதிய உறவால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பேச்சில் இனிமை உண்டாகும். எந்த இடத்தில் எதைப் பேசி காரியத்தை ஜெயிக்க முடியுமோ அதற்கு தகுந்தாற்போல பேசி வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும்.

ஆதாயம்

உங்களுடைய பேச்சை 4 பேர் கேட்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். 3க்கு உரியவர் சுக்கிரன் என்பதால் பிராயணங்கள் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதன் மூலம் அற்புதமான ஆதாயத்தைப் பெறுவீர்கள். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார். சுக்கிரன் கேதுவின் நட்சத்திரத்தில் பிரயாணம் செய்வதால் நிறைய பேருக்கு மெடிக்கல் சார்ந்த விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். மற்றவர்களின் வலியைப் போக்கக்கூடிய அமைப்பில் இருக்கும் மீனத்திற்கு நல்ல காலமாக இருக்கும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பிராயணம் செய்கிறார். அப்போது நல்ல ஊக்கத்தோடு, தன்னம்பிக்கையோடு, தைரிய, வீரியத்தோடு செயல்படும் காலகட்டமாக இருக்கும். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இடம், நிலம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

அனுகூலம்

சூரியன் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் கலைத் துறையினருக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். இசை, நாட்டியத் துறை, நடிப்புத் துறையில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பாராட்டைப் பெறுவீர்கள். அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும், ஆதாயம் அனுகூலம் உண்டாகும்.

திடீர் அதிர்ஷ்டம்

குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும். எதிரிகள் யாரென இனம் கண்டு கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பதவி உயர்வுகள் கிடைக்கும். 8 ஆம் இடத்தால் திடீர் வேலை வாய்ப்பு, இடமாற்றம், அதிர்ஷ்டம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பேச்சில் நிதானம்

சிறிய சிறிய இடைவெளிகள் குறைந்து சந்தோஷம் ஏற்படும். தந்தை, தாயுடன் இருந்து வந்த இடைவெளிகள் குறையும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி இணக்கமாவீர்கள். காதல் சார்ந்த விஷயத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது. புதிய நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவி அந்நியோன்யமாக இருப்பது நல்லது. சிறிய சிறிய விசயங்களுக்கும் கோபப்படாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+