துலாம் ராசிக்கு வீடு, கார், நிலம், சொத்து அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்.. சுக்கிரனின் அருளால் சூப்பர் மாற்றம்
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசிநாதன், 8க்கு உரியவர். கடந்த மூன்றரை மாதங்களாக 6 ஆம் இடம் எனும் கடன், நோய், எதிர்ப்பு ஸ்தானத்தில் இருந்தார். தற்போது 7 ஆம் இடம் எனும் திருமண ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்து பலப்படுத்துகிறார். கடந்த மூன்றரை மாதங்களாகவே எதிர்ப்பு, பகை, பிரச்சனை என்ற தன்மை இருந்த உங்களுக்கு இந்த நிலைமை எல்லாம் மறையப் போகிறது.
கடன் குறையும்
கடனைப் படிப்படியாக குறைக்கக்கூடிய தன்மைகள், சாத்தியக் கூறுகள் நிச்சயமாக உருவாகும். உங்கள் மனது நன்றாக இருக்கும். சுக்கிரனும், குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும். நெகட்டிவான தன்மைகள் உங்களை விட்டு விலகும். நல்லவற்றை நினைக்கும் தன்மை ஏற்படும். உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
திருமணத்துக்கு அற்புதமான காலமாக இருக்கும். கடந்த ஓராண்டாக குரு 8 ஆம் இடத்தில் இருந்தார். தற்போது 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துகொண்டு உங்கள் ராசியையும், தைரிய, வீரிய ஸ்தானத்தையும், 5 ஆம் இடமான அதிர்ஷ்ட ஸ்தானத்தையும் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், திருமண யோகம் கிடைக்கும். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை சிறப்பாக அமையும். வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய அமைப்பில் இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பு பெறும்.
ஜெயம்
திருமணம், சுப காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். ஜூன் மாதத்தில் செவ்வாயின் பெயர்ச்சியும் நடக்கிறது. 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் செவ்வாயும் அமர்கிறார். சுக்கிரனும், குருவும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தொட்டது துலங்கும் வாய்ப்பு ஏற்படும். கலைத் துறையில் இருக்கக்கூடிய துலாம் ராசிக்கு ஏற்றத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். சினிமா, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். பிறக்கும் குழந்தையால் உங்களுக்கு அமோகமான வெற்றி தரும் காலகட்டமாக இருக்கும். இழந்ததை எல்லாம் மீட்டெடுப்பீர்கள். ஒரு சிலருக்கு காதல் சார்ந்த விஷயங்கள் கைகூடும். காதல் திருணம் செய்வதற்கான வாய்ப்புள்ளது.
வெளிநாட்டு யோகம்
கடல் கடந்து பிராயணம் செய்வீர்கள், வேலை, சொந்த தொழில், சுற்றுலா போன்றவற்றுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். ஜவுளி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருப்பவர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
பெண்கள் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம், அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் ராசியை, லக்கினத்தைப் பார்ப்பதால் ஏற்றத்தைக் கொடுக்கும். நண்பர்கள் மூலமாக ஆண்கள் ஏற்படும். எதிர்பாலின மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் ஆதாயம் ஏற்படும். வேலையில் இருந்து வந்த பளு குறையும். அனுகூலமான மாதமாக இருக்கும்.
உழைப்பிற்கேற்ற அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டை புனரமைப்பது போன்றவற்றச் செய்து மகிழ்வீர்கள். வாகனம் வாங்கக் கூடிய யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் கார் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருள்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.












Click it and Unblock the Notifications