தனுசுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் கொட்டும்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கும் காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
அனைத்து விஷயங்களையும் நல்லதாகவே நினைக்கக் கூடியவர்கள். குருவின் ஆசிர்வாதத்தைப் பெற்றவர்களாகவும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை செயல்படுத்துபவர்கள் தனுசு ராசியினர். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். தனுசுக்கு 6க்கு உரியவராகவும், லாபத்தைக் கொடுக்கக் கூடியவராகவும் சுக்கிரன் இருக்கிறார்.
எச்சரிக்கை
சுக்கிரன் 6 ஆம் இடத்தில் வந்து ஆட்சி பலத்தோடு அமரப் போகிறார். உங்களுடைய எதிரி பலமாக இருக்கப் போகிறார். அதற்கு தகுந்தாற்போல நீங்கள் செயல்படுவது நல்லது. கடன், நோய், எதிர்ப்பு, பகை, வம்பு, வழக்கு போன்ற விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேட்க வேண்டிய இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன் மூலமாக சில ஆதாயங்களைப் பெறும் யோகம் உண்டாகும். ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும்.
கடன் தீரும்
கடனை அடைத்துவிட்டு வேறு வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணம் தோன்றும். வங்கிகளில் கடன் நிச்சயமாக கிடைக்கும். வீடு வாங்கும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடனை வாங்கி வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
தொழில்
குரு பகவானும் 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால், சுக்கிரனும் லாபத்தைக் கொடுப்பதால் லாபத்தை அடைவதற்கான அத்தனை முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். நிறைய தனுசு ராசியினர் சொந்த தொழில் செய்வது, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் வரும். அதற்கான திட்டத்தை மேற்கொள்வீர்கள். எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டங்கள் மேலோங்கும்.
பாக்கியம்
சுக்கிரன் ஜூன் 29 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை சூரியனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நல்ல பாக்கியம் ஏற்படும். எந்த பாக்கியத்துக்காக இதுவரை காத்திருந்தீர்களோ அந்த பாக்கியங்கள் உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அபரிமிதமான சந்தோஷங்கள் ஏற்படும்.
உறவுகள்
காதல், திருமண பந்தம், குழந்தை பேறு என ஏதாவது ஒரு உறவு உங்கள் குடும்பத்தில் கண்டிப்பாக இணையும் அமைப்பு உள்ளது. ஜூலை 8 முதல் 20 ஆம் தேதி வரை சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் அந்நியோன்யத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது. சண்டை, சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டங்களில் கடன்களை தவிர்ப்பது, வாங்குவது, கொடுப்பது, வம்பு, வழக்குகளை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான விஷயங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
6, 8 இல் வலியைக் கொடுத்தாலும் திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டாகும். திடீர் இடமாற்றம், பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம், பங்குச் சந்தையில் லாபம் வரும் அமைப்பு போன்ற எதிர்பார்க்காத யோகங்கள் கிடைக்கும். இருப்பினும், இந்த காலகட்டங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஜூலை 20 முதல் 25 வரை செவ்வாயில் சுக்கிரன் பயணிப்பதால் பூர்வீக சொத்து விவகாரங்கள், சொத்துப் பிரச்சனை, பாகப் பிரச்சனைக்குள் செல்லாமல் இருப்பது நல்லது. சுமூகமாக செல்வது நல்லது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications