Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துலாமிற்கு சுக்கிரன் உச்சத்தில் லக்குதான் மச்சத்தில்.. ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

sukkiran-peyarchi-thulam-rasi-people-get-lots-of-money-benifits-during-this-sukkiran-peyarchi

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

சித்திரை 3, 4 நட்சத்திர பாதங்களையும், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய 9 நட்சத்திர பாதங்களைக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் என்பது ராசியாதிபதி, லக்னாதிபதி ஆவார். அஷ்டமாதிபதியும் சுக்கிரன் தான். தற்போது சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு வந்து அமரப் போகிறார். 8 ஆம் இடம் வலிமை பெறுவதால் வேலை, வியாபாரம், தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

வேலைவாய்ப்பு

8 ஆம் இடம் என்பது வலி, வேதனை என்றாலும் திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். திடீர் வேலைவாய்ப்புகள் உங்கள் சொந்த முயற்சியால் கிடைக்கும். இன்டர்வியூ ரிசல்டுக்காக காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் வந்து சேரும். வெளிமாநிலம், வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்யும் வாய்ப்பு வரும். வெளிநாடு, மாநிலம் மூலமாக தனம் வந்து சேரும். லாக்காகி இருந்த பணங்கள் உங்களுக்கு வந்து சேரும் காலகட்டமாக இருக்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

பங்குச்சந்தை, காப்பீடு விஷயங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். 8 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். கையிருப்பு பணம் அபரிமிதமாக வரும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். லட்சங்களைக் கொடுக்க கூடிய சுக்கிர பகவான் ஆட்சி பலத்துடனும், கோடிகளைக் கொடுக்ககூடிய குரு பகவான் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதும், உங்கள் ராசியை பார்ப்பதாலும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். பணம், பொருளாதாரம் அருமையாக இருக்கும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

உங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். செல்வாக்கு, திறமைகளை வெளிக்கொணருவீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையைப் பெறுவீர்கள். ராசிநாதன் வலுப்பெறுவதால் நிலம் விற்கும் வாங்கும் உண்டாகும். அதன் மூலம் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். புதிய வீடு வாங்குவது, கட்டுவது, அப்பார்ட்மெண்ட் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் வரும். கடன் வாங்கி புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம்

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் குரு 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சை முறையில் குழந்தை பெறும் பாக்கியமும் உண்டு. சுக்கிர பகவான் ஜூலை மாதம் 8 ஆம் தேதி வரை சூரியனின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். நினைத்த லாபம் கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தம் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக உயர்வு உண்டாகும். இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும்.

அனுகூலம்

தந்தையின் மூலம் அனுகூலம், ஆதாயம் கிடைக்கும். மின்சாரம், ஒளி சம்பந்தப்பட்டவை சிறப்பு பெறும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 8 முதல் 20 ஆம் தேதி வரை சந்திரனுடைய நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக சில முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலுக்காக பயணங்கள் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் வரும். புதிய ஐடியாக்களை தொழிலில் புகுத்துவீர்கள்.

தனம் பெருகும்

ஜூலை 20 முதல் 25 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால், தனத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் வரும். குடும்பத்துடன் கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு வரும். கணவன், மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கூடுதல் வருவாய்க்கு உண்டான தொழிலை செய்யும் யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட் உண்டாகும் வாய்ப்புள்ளது. அருமையான காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+