விருச்சிகத்தின் ஆட்டமே இனிதான் ஆரம்பம்.. சுக்கிரனின் அருளால் இனி தொட்டதெல்லாம் ஹிட்டாகும்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
குடும்பத்திற்காக அயராது உழைக்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். கோபம், ஆக்ரோஷம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் கலந்தவராக இருப்பீர்கள். அதிகாரத் தன்மை, அதிகாரப் பதவியில் இருக்கும் தன்மை இருக்கும். நன்கு பேசக்கூடிய தன்மை உடையவர்களாக இருப்பீர்கள். 6 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் 7 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 7 ஆம் இடம் என்பது திருமண ஸ்தானம்.
சுப விரையம்
7 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்தோடு அமர்ந்து, சமசப்தம பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் நல்ல தன்மை உங்களுக்கு கிடைக்கும். சுகபோகங்களை அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும். 7, 12க்கு உரியவராக உங்களுக்கு சுக்கிரன் இருப்பதால் நிறைய விரையங்கள் ஏற்படும். அதனை சுப விரையங்களாக மாற்றிக் கொள்வது நன்மை பயக்கும். கணவன் அல்லது மனைவி சார்ந்த விஷயங்களில் நன்மை கிடைக்கும்.
மாற்றங்கள்
கணவன் அல்லது மனைவி தொழில் ரீதியாக செட்டிலாகும் யோகம் உண்டாகும். இருவரும் இணைந்து தொழில் செய்யக்கூடிய என்கிற எண்ண ஓட்டும் வரும். ஜூலை 8 ஆம் தேதி வரை சுக்கிரன் சூரியனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நிச்சயமாக தொழில், வேலை, வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். அதனைப் பற்றிய எண்ண ஓட்டம், மாற்றங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். வேலையில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
முன்னேற்றம்
வியாபாரம், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு, அரசின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சந்திரனுடைய நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் ஜூலை 8 முதல் 20 ஆம் தேதி வரையான இந்த காலகட்டத்தில் நல்ல பாக்கியங்கள் கிடைக்கும்.
பதவி உயர்வு, பயணம்
நீங்கள் நீண்டகாலமாக நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். விரும்பிய வாகனம் வீடுகள் வாங்கும் யோகம் உண்டாகும். பயணங்கள் செய்யும் யோகம் உண்டாகும். வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புகள் வரும். வலிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த காலம் எல்லாம் மாறப் போகிறது. திடீர் வாய்ப்புகள், திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். திடீர் பதவி உயர்வு, திடீர் பயணங்கள் உண்டாகும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
முதலீடுகளைச் செய்வீர்கள். நிலம், வீடு, வாகனம், வண்டிகள் வாங்கும் அமைப்பு உண்டாகும். 8 ஆம் இடத்தில் இருந்து குருவும் 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வலிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் மாறும். காப்பீடு, பங்குச் சந்தையில் திடீர் ஜாக்பாட்கள் உண்டாகும். பொருளாதாரம், தன ரீதியாக சிறப்பு பெறுவீர்கள்.
வெற்றி
20 முதல் 25 ஆம் தேதி வரை செவ்வாய் நட்சத்திரத்தில் பயணிப்பதால் உங்களுடைய தனித்துவத்தை, திறமைகளை வெளிக்காட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். அதிகாரம் கிடைக்கும். அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதுவீர்கள். கலைத் துறையில் அருமையாக விளங்குவீர்கள். விளையாட்டுத் துறையில் ஜொலிப்பீர்கள். நிலம், இடம் வாங்கும் யோகம். விவசாயத்தில் புரட்சி செய்வீர்கள். காவல் துறை, ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications