சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 30 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடத்தில் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் வருகிற மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் பலனடையவுள்ள 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
ராசிகள்
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில் ரிஷபம், துலாம், தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகள் மிகவும் நல்ல பலன்களை பெறப் போகிறார்கள். அதுகுறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியவை நல்ல அமைப்பில் தான் இருக்கின்றன. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 12 ஆம் இடத்துக்கு வருகிறார். இது விரய ஸ்தானமாக இருந்தாலும் பல நல்ல பலன்களும் கிடைக்கும். தெளிவான திட்டமிடல்களால் நல்ல வெற்றி கிடைக்கும்.
மாற்றம்
அதீத பண வரவு இருக்கும். கடன் சுமை குறையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் சுக்கிரன், குரு இருவரும் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும். உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். வெளிநாடு பயணம் கைக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்கு சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் நேர்மைக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சுப காரிய தடைகள் விலகும். திருமண யோகம் உண்டாகும்.
ஏற்றம்
உத்யோகம், தொழிலில் வளர்ச்சி இருக்கும். செவ்வாய் பகவான் உங்களின் 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன், செவ்வாய் இருவரும் உங்கள் ராசியை பார்ப்பதால் ஏற்றம் காண்பார்கள். கலை, ஊடகம் துறையில் இருப்போருக்கு புதிய ஒப்பந்தங்களால் உச்சம் தொடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு சுக்கிரன் உங்களின் ஐந்தாம் இடத்தில் அமரப் போகிறார். உங்களின் லாபதிபதியான சுக்கிரன் ஐந்தாம் இடத்துக்கு வருவது நல்ல பலன்களை கொடுக்கும். உங்கள் மனதில் நீண்ட காலமாக நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வியில் எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகிழ்ச்சி
சுக்கிரன் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் உத்யோகம், தொழிலில் நல்ல ஏற்றம் கிடைக்கும். திருமணம், காதல் உறவில் இனிமை கூடும். திருமண தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கு சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து உங்களின் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இரண்டாம் இடம் என்பது தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தை குறிக்கும். இதனால் பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.
புகழ்
தொலை தூர தொடர்புகளால் நல்ல தகவல் கிடைக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு. குடும்ப உறவுகளால் நன்மை கிடைக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் திருமண யோகம் உண்டாகும். சமூகத்தில் உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications