சுபகிருது வருடத்தில் சுபிட்சமும் விளைச்சலும் உண்டாகும் - தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் கணிப்பு
சுபகிருது புது வருடத்தில் நல்ல மழை பெய்யும் விளைச்சல் அதிகரிக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. உற்பத்தி அதிகரித்து நாடு செழிப்பாக இருக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம்.
தமிழ் வருடங்கள் 60ல் சுபகிருது 36வது ஆண்டாக அமைந்துள்ளது. சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும்.
மங்கலகரமான 'சுபகிருது புத்தாண்டு, 14.4.22 வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீடான மீன ராசியில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தரப்போகிறது.

சுபகிருது வருட வெண்பா பலன்
சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.
சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்
அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்
கேடெங்கு மில்லையதிற் கேள்
வெண்பா பொருள்:
சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மான்களுக்கு நோய் தாக்கும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை' என்கிறது இந்த வெண்பா.

சுகமான ஆண்டு
சுபகிருது வருடத்தில் பிறந்த மனிதன் சௌபாக்கியம், கல்வி, அளவற்ற புண்ணிய கர்மங்களினாலே வெகுகாலம் ஜீவித்திருப்பவனும் பிள்ளைகளும் அதிகம் செல்வமும் உடையனுமாவான்.
சுபகிருது வருடத்தில் நோய்க் கிருமிகள் அதிக அளவில் பரவினாலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த ஆண்டு முழுவதுமே குருபகவான் தன் சொந்த வீடான மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆகவே, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை நல்ல முறையில் காணப்படும்.

நல்ல மழையால் மகிழ்ச்சி
சுப கிருது ஆண்டின் ராஜா சனிபகவான். மந்திரி குரு பகவான், சேனாதிபதி,அர்க்காததிபதி,மேகாதிபதி புதன் பகவான். தானியாதிபதி சுக்கிரன். ரஸாதிபதி சந்திரன் ஆவார். ராஜா சனியாக இருப்பதால் மழை வளம் பெருகும். உணவுப்பொருட்கள் உற்பத்தி, பணப்பயிர் உற்பத்தி அதிகரிக்கும். அரசின் புதிய சட்டங்களால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். எல்லையில் அந்நியர் ஆதிக்கம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.

குற்றங்கள் குறையும்
குரு பகவானின் பார்வையால் உலகத்தில் இருந்துவந்த துன்பங்கள் விலகி, படிப்படியாகக் கஷ்டங்கள் தீரும். கடத்தல் முதலான குற்றத் தொழில்கள் கட்டுப்படுத்தப்படும். அமைச்சராக குரு வருவதால் விவசாயத்திற்கு தேவையான காலத்தில் தேவையான அளவு மழை பொழியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கித் தொழில் சிறப்படையும். மக்கள் சுகத்தோடும் சந்தோஷத்தோடும் இருப்பார்கள்.

புதன் செய்யும் மாயம்
சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதியாக புதன் இருப்பதால் திரைப்படக்கலைஞர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அதே நேரத்தில் காற்றின் மூலம் நோய்கள் பரவும். அதனை தீவிரவாதிகள் உபயோகிப்பார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை அடிக்கடி ஏறி இறங்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சனிபகவான்
இந்த ஆண்டு பிறக்கும்போது நீதிமானான சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக நடைபெற்று தீர்ப்புகள் வெளியாகும். நம் நாட்டில் கனிமப்பொருள்கள் மூலம் அரசுக்குப் பலகோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். புதிய தங்கச் சுரங்கம் மற்றும் கடல் பகுதியில் அரிய பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்படும்.நம் தேசத்துக்கு வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகமாகக் காணப்படும்.

தென்மேற்குப் பருவமழை வெள்ளம்
ஆனி மாதம் இடி மின்னலுடன் புயல் காற்றும் பெருமழையும் ஏற்படும். நாட்டின் மத்திய பகுதி செழிப்பாக இருக்கும். கடற்கரைப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருக்கும். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் கடற்கரைப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
பழ வகைகள், கிழங்கு வகைகள் உற்பத்தி அதிகமாகி விலை குறையும். விவசாயத்தில் புதிய முறைகளை புகுத்தி விளைச்சலினால் அதிக பொருளாதார வளம் பெறுவார்கள். இரும்பு விலை ஏறும். நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்குள் வரும். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொன்னான காலம்; அதிகமான ஊதியமும் ஊக்கத்தொகையும் கிடைக்கும். மொத்தத்தில் சுபகிருது ஆண்டு மக்களுக்கு பொன்னான ஆண்டாக இருக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications