Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: அஷ்டமத்து சனி விலகல்.. கடக ராசிக்கு தொழில் தொடங்கும் யோகம்.. லாபம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

Kadagam Tamil puthandu rasi palan

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கடக ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடக ராசி பலன்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பமாகியாதில் இருந்து அவர்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் அளவுக்கு அதிகமானது. 8 இல் சனி வந்த காலகட்டத்தால் நிறைய கடக ராசிக்காரர்கள் இல்லற வாழ்வை இழந்திருப்பார்கள். இந்த புத்தாண்டில் பட்ட துன்பங்கள் எல்லாம் விலகும், எல்லா வலிகளுக்கும் மிகப்பெரிய தெளிவை கடவுள் ஏற்படுத்துவார்.

2, 8 இல் ராகு கேது வருவதால் புதிய நண்பர்கள், புதிய உறவுகளிடமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் மீதும் அளவுக்கதிமாக பாசம் வைக்காமல் இருப்பது நல்லது. ஏழரை சனியால் உறவுகள், காதலில் நிறைய பிரச்சனைகள் வந்திருக்கும். இந்தப் பாடத்தை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். இதை தவிர்த்தாலே எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

12 இல் இருந்த குரு 12 ஆம் இடத்துக்குப் போகிறார். சுப விரையங்களைச் செய்ய அமோகமான காலகட்டமாக இருக்கும். வீடு கட்டுவது, சுப காரியங்கள் செய்வது, இடம் வாங்குவது, நகை எடுத்து வைப்பது போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். குரு பார்க்கக்கூடிய 4 ஆம் இடம் அருமையாக இருப்பதால் தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

புதிய முதலீடுகள், புதிய முயற்சிகள், புதிய தொழில்கள் அமோகமான வெற்றியைத் தரும். வீட்டில் குதூகலம், மகிழ்ச்சி உண்டாகும். நிம்மதியாக உறங்குவீர்கள். தோல் பிரச்சனை, மன நோய் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மண், மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடன் சுமைகள் அனைத்தும் தீரும். கிரெடிட் கார்டு லோன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தீர்ப்பீர்கள். மறைமுகமாக இருந்த வஞ்சகம், சூழ்ச்சி, போட்டி, துரோகம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். இனி கடவுளின் அருள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும். காதல், திருமணம், உறவுகள் என அனைத்திலும் பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இனி உங்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். சுப மாங்கல்யம் கூடிவரும். பிரிந்த தம்பதிகள் சேரும் வாய்ப்பு ஏற்படும். 9 இல் சனி போவதால் தந்தையின் உடல் நலனில் கவனம், கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது. அப்பாவை எதிர்த்துப் பேசுவது போன்றவை பிரிவை ஏற்படும். ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்படும்.

பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 12 இல் குரு வருவது வேற்று நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ பயணம் செய்வதற்கான சூழல் ஏற்படும். இனி உங்கள் வாழ்க்கையில் எல்லா சாதகமான பலன்களும் கிடைக்கும்.

எச்சரிக்கை

வாக்கு ஸ்தானத்தில் கேது வருவதால் வார்த்தைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அன்புக்கும், காதலுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதால் அனைவரையும் நம்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதீத அன்பு, அதீத காதல் யார் மேலும் இல்லாமல் இருப்பது நல்லது. 2 இல் கேது இருப்பதால் பேச வைத்து எதிரியாகக்கூடிய சூழல் உண்டாகும்.

பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. நீங்கள் ஒதுங்கிச் சென்றாலும் தேவையில்லாத உறவுகள் உங்களைத் தேடி வரும். ஆண்களாக இருந்தால் வயதில் மூத்த பெண்கள், பெண்ணாக இருந்தால் வயது குறைந்த இளைய உறவுகளிடம் பேசும் சூழலும் அது தவறாக முடியும் வாய்ப்புள்ளது. மூன்று வருடங்களுக்கு இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மாணவர்கள், பெண்கள்

மாணவர்கள் அருமையாக படிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நல்ல கல்லூரியில் படிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்குப் பொற்காலமாக இருக்கும். பெண்கள் சுதந்திரமாகப் பறக்கும் சூழல் ஏற்படும். மிகச் சிறந்த இடத்துக்குப் போகும் வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். மற்றவர்கள் முன்பு ஜெயித்துக் காட்டும் காலமாக இருக்கும். நல்ல பதவி பொறுப்புகளைத் தரும். அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கர்ப்பப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மன அழுத்தம் விலகுவதால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மதிப்பெண்

கடக ராசிக்காரர்களுக்கு 100க்கு 95 சதவீதம் நன்மைகள் கிடைக்கும். அஷ்டமத்து சனி விலகியுள்ளதால் பாசிட்டிவான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

பெளர்ணமி நாளில் நிலா வெளிச்சம் படும் வகையில், சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. பெளர்ணமி தோறும் எலுமிச்சையை கையில் வைத்து சிவபெருமான் கோயிலில் 9 முறை வலம் வந்தால் நீங்கள் நினைத்த அனைத்தும் உங்களுக்கு கைகூடும். மனதாரப் பிரார்த்தனை செய்து எலுமிச்சையை உங்கள் வீட்டின் பூஜையறையில் வைப்பது நல்ல பலன்களைத் தரும். பின்னர், அந்த கனியை நீர்நிலைகளில் விடுவது நல்லது. கடன் தொல்லைகள், சிக்கல்கள், நோய் நொடிகள் அனைத்தும் தீரும். 9 பெளர்ணமிக்கு இந்த விஷயத்தை கடைப்பிடித்தால் நன்மை பயக்கும். அதேபோல, ஜோடி தீபம் ஏற்றுவது அதிர்ஷ்டத்தை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+