தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. இனி சேமிப்பு, முதலீடு, லாபம் மட்டும்தான்
தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.
தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.
இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு விரைய குரு ஜென்மத்தில் வரப் போகிறார். ஜென்ம குரு என்பது பலருக்கும் சஞ்சலத்தை ஏற்படுத்தும். அற்புத பலன்களை அடையும் அனுகூல காலகட்டமாக இருக்கும். சுக ஸ்தானத்தில் இருந்து கேது விலகப் போகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிம்மதியில்லாமல் தவித்து வந்திருப்பீர்கள். எல்லாம் இருந்து மன நிம்மதி இல்லாமல் இருந்திருப்பீர்கள். செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கும். இனி எல்லாம் மாறப்போகிறது.
ராசியில் குரு வருவது குரு சந்திர யோகத்தை ஏற்படுபத்துவதால் எண்ணம், மனசு தெளிவடையும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உடலில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் பரிபூரணமாக குணமடையும். புதிய முடிவுகளைத் தெளிவாக எடுப்பீர்கள். அனைத்து முடிவுகளிலும் நல்ல வெற்றிகளைக் காண்பீர்கள். 4 ஆவது இடத்தில் இருந்த கேதுவால் ஏற்பட்ட சொத்து பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மனையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் பனிபோல விலகும்.
ஜாக்பாட்
வீடு கட்டுவது, அட்வான்ஸ் கொடுத்து வேண்டியதை முடிப்பது, தாய்க்கு உடல் பரிபூரண குணமடையும். மிதுனத்து 10 இல் வரக்கூடிய சனி பகவான் பெரிய ஜாக்பாட்டை கொடுக்கப் போகிறார். தகுதிக்கு மீறிய பதவி உயர்வு, மூன்று மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும். அப்பாவுடன் ஏற்பட்டு வந்த சண்டைகள் சச்சரவுகள் அனைத்தும் விலகும். இனி தந்தையுடன் இணக்கமாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும்.
கடவுள் அருள்
5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். நீங்கள் கேட்கும் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கைகூடும் பரிபூரண கடவுள் அருள் கிடைக்கும். 7 ஆம் இடத்தில் குரு பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
திருமண யோகம்
கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம். திருமண யோகம் கைகூடி வரும். நண்பர்கள் அறிமுகம், புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும். காதல் உண்டாகும். 9 ஆம் இடத்தில் இருந்த சனியால் பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வாக்கு வன்மை இனி பலப்படும். சொல்கிற வார்த்தையை காப்பாற்றுவீர்கள்.
ஜெயிக்கும் காலம்
மாணவர்களுக்கு பாசிட்டிவான காலகட்டமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு மாற்றத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிலும் ஜெயிக்க முடியவில்லை என்று வருந்தியவர்கள் அனைவரும் இனி சாதிக்கும் காலமாக இருக்கும். உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். புதிய அறிமுகங்களால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள்.
முன்னேற்றம்
அரசியலில் இருப்பவர்கள் இரண்டரை வருடங்களில் பெரிய பொறுப்பு, உச்சத்தை அடைந்தே தீர்வீர்கள். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பஞ்சம ஸ்தானம் எனும் சுக்கிரன் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிறிய ரோல் செய்தாலும் பெரியளவில் பேசப்படும். மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் தரும் வாய்ப்பை இந்த புத்தாண்டு உண்டாகும். செலவுகள் அனைத்தும் குறையும். பண வரவுகள் பெருகும் நல்ல காலமாக இருக்கும்.
எச்சரிக்கை
கூடா நட்பில் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத நண்பர்களை புறந்தள்ளுவது நல்லது. யாரிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறீர்களோ அவர்களால் நம்பிக்கை துரோகம் ஏற்படும். கணவன், மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவது நபரை தலையிட விடாமல் இருப்பது நல்லது. ரத்த பந்த விஷயங்களில் சண்டை செய்யாமல் புரிதலோடு இருப்பது நல்லது. பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
மதிப்பெண்
மிதுன ராசிக்காரர்களுக்கு 100க்கு 90 சதவீதம் நன்மைகள் கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்
பெருமாள் வழிபாடு உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும். பச்சைப் பயிறு, சுண்டல் தானம் அளிப்பது நல்ல மாற்றத்தை தரும். கண் பார்வை இழந்த பிள்ளைகளுக்கு அன்னம் கொடுத்து உதவுவது, உங்கள் பாவங்கள் அனைத்தையும் போக்கும்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications