கொண்டாட்டம்தான்.. நினைச்சதெல்லாம் நடக்கும் காலம்.. இந்த ராசிகளுக்கு அடுத்த 1 வருடம் அமோகம்!
சென்னை: தமிழ் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் இந்த புத்தாண்டில் கீழ் கண்ட 6 ராசிகளுக்கு என்ன மாதிரியான நல்ல விஷயங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்கள்: மேஷத்தில் சூரியன் குரு ஆகியவை இந்த புத்தாண்டில் நிலவும். இந்த மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும். நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனை இருக்காது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கான இந்த பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும்., பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியா சில பிரச்சனைகள் வரும். திருமண வாழ்க்கையில் நிலவிய சில பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து இருந்த கணவன் உங்களுடன் சேரும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்.

வேலை ரீதியில் என்ன நடக்கும்?: வேலையில் பணி உயர்வு கிடைக்கும். புதிய நிதி ஆண்டின் அதிக சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதல் வருமானத்தை நன்றாக முதலீடு செய்வது நல்லது. முதலீடுகளில் கவனம் செலுத்தவும். பணியில் மூத்தவர்களிடம் கவனம் அவசியம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வார்த்தையில் கவனம்; இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் குணமே எடுத்து எறிந்து பேசுவதுதான். அந்த குணம் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் கவனம் அவசியம். எப்போதும் கவனம் அவசியம். குடும்ப பிரச்சனை தீரும்: குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை. நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும். உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும்.
பரிகாரம்; உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கு பூஜை செய்யுங்கள்.
சிம்மம் ராசி பலன்கள்; எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது உங்களுக்கு மிக அவசியம். எதிலும் அவசரம் வேண்டாம். ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுங்கள். அலுவலகத்தில் நேர்மையாக இருங்கள். இந்த வருடம் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிதாக மாறலாம். அதனால் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.
கவனமாக செயல்படுங்கள்: வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன,. வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள், அதேபோல் கடலில், நீர் நிலைகளில் குளிக்கும் போது கவனமாக செல்லுங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். சிலருக்கு நல்லது செய்கிறேன் என்று உதவி செய்ய சென்றால் கூட பிரச்சனையாக மாறிவிடும். சிக்குனா சில்லறை ஆகிவிடுவீர்கள். கவனம்.
குடும்பத்தில் சண்டை வரும்; குடும்பத்திலும் நிம்மதி தொலையலாம். அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் அமைதியாக வீட்டில் இருக்கவும். பிரச்சனை, சண்டைகள் வந்தால் பெரிதாக அதில் தலையிடாமல் கொஞ்சம் பொறுமை காக்கவும். முக்கியமாக நிலம் வாங்கும் விஷயங்கள், வீடு வாங்கும் விஷயங்களில் அகலக்கால் வேண்டாம்.
என்னென்ன நல்லது நடக்கும்?: உங்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் பின்வரும் நல்ல விஷயங்களும் நடக்கும். உங்களின் ஆரோக்கியம் சரியாகும். இத்தனை காலம் நீங்கள் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகும். அதிலும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இந்த முறை சிம்ம ராசிக்கு குரு 2, 4 , 6 இடத்தில் பார்க்கிறார்.
இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
கன்னி ராசி பலன்கள்: கன்னி ராசிதாரர்கள் பொதுவாக பலரும் பிறந்ததில் இருந்தே கஷ்டப்பட்டு இருப்பார்கள். நினைத்தது எதுவும் உங்களுக்கு நடந்து இருக்காது.
காதல் வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். உங்கள் பள்ளி படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.
வளர்ந்த பின் கடன் மேல் கடன், திருமணம் கைகூடவில்லை, சொந்த வீடு இல்லை, அப்பா வாங்கிய கடனை அடைய வேண்டிய கட்டாயம் என்று பல கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும்.
அதன்பின் உடல் ரீதியான பிரச்சனைகள், விபத்துகள் மேல் விபத்துகள். பல்வேறு கண்டங்கள் கூட ஏற்பட்டு இருக்கும். இப்படி பட்டதெல்லாம் கஷ்டம்.. பார்த்ததெல்லாம் நஷ்டம் என்று கடுமையாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள். எல்லாம் மாறும்: இந்த 2024 தமிழ் புத்தாண்டில் இருந்து உங்களுக்கு பின்வரும் மாற்றங்கள் ஏற்படும்.
உங்களுக்கு பணம், பொருளாதாரம் உயரும். சினிமாவில் வாய்ப்புகள் வரும். உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது. எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். முக்கியமாக குரு பெயர்ச்சிக்கு பின் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மே 1ம் தேதி குரு பெயர்ச்சி ஏற்படும். அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார். இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்கள்: இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு.
இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.
துலாம் ராசி கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பலன்கள்: கடந்த 10 வருடமாக நீங்கள் கடுமையாக பல விஷயங்களில் கஷ்டப்பட்டீர்கள். உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. ஆரோக்கிய ரீதியாக சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, வயிற்று பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது.
குடும்பத்தில் சண்டை, திருமண வாழ்க்கையில் சண்டை, குழந்தைகளின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்தது. உங்கள் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்தது. உங்களின் குழந்தைகள், பெற்றோர்களின் பொருளாதாரமும் மோசம் அடைந்தது. உங்களின் சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உங்களின் வீட்டை கூட காலிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
விருச்சிக ராசிக்கு நடக்கும் நல்ல பலன்கள்: வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும். பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள்.
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட வேண்டாம். இந்த வருடமே வீடு காட்டுவீர்கள். மே மாதமே நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். தொட்டது துலங்கும். இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் விருச்சிக ராசிக்கு எல்லாம் நல்லதே நடக்க போகிறது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். என்ன செய்ய வேண்டும்: மதுரை மீனாட்சி கோவில்களுக்கு செல்வது நல்ல பரிகாரமாக அமையும். ஆலங்குடி குருஸ்தலத்திற்கு குரு பெயர்ச்சிக்கு பின் சென்று பூஜை செய்வது பலன் தரும்.
கும்பம் ராசி பலன்கள்: அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.
இந்த புத்தாண்டு காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும்.
விடாமல் தொடர்ந்த கஷ்டம்: கும்ப ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது.
உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.
இனி எல்லாம் நல்லதே நடக்கும் பாஸ்: உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு, ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. இதை தொழில்ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது.
இதே வருடம்தான் மே 1ம் தெத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் களமிறங்குகிறார். 4ம் வீட்டில் குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது.
பரிகாரம்: வீரன் தெய்வத்தை வணங்கவும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications