Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 1 வருடத்திற்கு.. இந்த ராசி எல்லாம் ரொம்ப கவனமாக இருங்க பாஸ்.. சிக்கல் மேல் சிக்கல் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் இந்த புத்தாண்டில் கீழ் கண்ட 6 ராசிகளுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.


ரிஷப ராசி பலன்கள்: உங்களுக்கு நல்ல தொடங்க போவதெல்லாம் மே 1ல்தான். அதனால் 15 நாட்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Tamil New Year Rasi Palan 2024 These 6 Rashis should be careful for next 1 year - HOROSCOPE

அலட்சியம் வேண்டாம்: எதிலும் அலட்சியம் வேண்டாம். அடுத்த 15 நாட்களை கடந்து விடுங்கள். புத்தாண்டு குருபெயர்ச்சியும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள். கால் மேல கால் போடும் காலம்: புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்கு பின் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். கால் மேல் கால் போடும் காலம் வரும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது. குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும்.

பணம் வரும்: நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

பரிகாரம்; வடபழனி முருகன் கோவில் அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று பூஜை செய்யுங்கள்

மிதுன ராசி பலன்கள்: எல்லா மாற்றமும் வர கூடிய இந்த வருஷத்தில் கொஞ்சமும் அலட்சியமாக இருக்காதீர்கள். எதையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட இரண்டுக்கு மூன்று முறை சோதனை செய்து பார்த்துவிட்டு மெசேஜ் அனுப்புங்கள். இது எடுத்துக்காட்டுதான். இப்படி எல்லா விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம் சரியாகும்: உங்களின் ஆரோக்கியம் சரியாகும். உடல் ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். இதுவரை இருந்த கிட்னி பிரச்சனைகள் சரியாகும். வயிற்று பிரச்சனைகள் சரியாகும். கால் வலி நீண்ட காலம் இருந்த போதிலும் இப்போது சரியாகிவிடும்.

சேர்க்கையில் கவனம் வேண்டும்: காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்றன பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். உங்களின் சேர்க்கையில் கவனம் வேண்டும். யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். கூடாது சேர்க்கை பல பிரச்சனைகளை, ஆபத்துகளை ஏற்படுத்தும்.

குடும்பத்தினரிடம் அன்பாக இருங்கள்: நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். இந்த காலத்தில் குடும்பத்திரிடம் அன்பாக இருங்கள். அவர்களிடம் சண்டை போட வேண்டாம். அம்மா அப்பாவிடம் அன்பாக இருங்கள். மனைவியிடம் கோபம் கொள்ள வேண்டாம் .

ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு எல்லாம் மாறும் என்பதால் மாற்றம் தரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.

கடகம் ராசி பலன்கள்: எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருங்கள். எதையும் யோசித்து செய்யுங்கள். ஒவ்வொரு படியையும் பார்த்து பார்த்து வையுங்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடங்கள், படிக்கும் இடங்களில் பொறுப்பாக இருங்கள். ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக வையுங்கள். அலுவலகங்களில் சில சமயங்களில் உங்களுக்கு அதீத பிரஷர் வரலாம். அதனால் நீங்கள் தவறு கூட செய்யலாம், இதனை தவிர்க்க மிகவும் பொறுப்பாக செயல்படுங்கள்.


பணம் வரும்: நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் பணம். முக்கியமாக இந்த புதிய நிதி ஆண்டில் வருமானம் புதிய உச்சத்தை தொடும். பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யவும். நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

கெட்ட எண்ணம் வேண்டாம்: உங்களுக்கு அதிகமாக கெட்ட எண்ணம் பிறக்கலாம். அதனால் கெட்ட எண்ணம் வந்தால் உடனே மறந்துவிடுங்கள். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே. யோசித்து பேசுங்கள்.

ஆரோக்கியம் சரியாகும்: இந்த புத்தாண்டு உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்யும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.

திருமண உறவில் கவனம்; திருமண உறவில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு பெண், ஆண் பார்க்க வேண்டாம். மன வாழ்ககையை யோசித்து முடிவு எடுக்கவும். முக்கியமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திருமண உறவில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும்.

தனுஷு ராசி பலன்கள்: நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.

செலவு பார்த்து செய்யுங்கள்: மே 1ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. இதுவும் இந்த வருடம் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வேலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்: வேளைகளில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.

கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். குரு பெயர்ச்சி + புத்தாண்டு: ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.

தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்; நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும்.

மகர ராசி பலன்கள்: இந்த புதிய ஆண்டில் மகர ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் : உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.

உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். ஆனால் இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். கிட்னி பிரச்சனை ஏற்படலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்கள்; புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும் . எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.

இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரங்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலே உங்களுக்கு திருமணம் கைகூடும்.

உங்கள் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக பலன்கள் ஏற்படும். உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.


மீன ராசி பலன்கள்; புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.


படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.

திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

மீன ராசிக்கு பாதகமாக போகும் விஷயங்கள்: இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+