தமிழ் புத்தாண்டு பலன்: மிதுனத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. வாழ்க்கையே மொத்தமாக மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

tamil-puthandu-palan-for-mithunam-what-kind-of-benefit-will-get-mithunam-gemini-rasi-people-duri

ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் வெண்பாக்கள் உண்டு. அந்த வெண்பாக்களின்படி இந்த ஆண்டில் விவசாயப் பெருக்கம் ஏற்படும். கால்நடை புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் பஞ்சங்கள் நீங்கும். செழிப்பான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மிதுன ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம் - இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு ராகவேந்திரருடைய பரிபூரண அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். சனிக்கிழமையில் பசு மாட்டிற்கு உணவு கொடுப்பது அனுகூலத்தை தரும். ரத்த அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உணவு முறை, மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.

உத்தியோக மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுவது அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பெரிய நிம்மதி ஏற்படும். துணையின் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். பெரியவர்கள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் பரிபூரண நிவர்த்தி உண்டாகும். குடும்பத்தில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உயரும். திருமணத் தடைகள் நீங்கி சுபிக்ஷமான காலகட்டமாக இருக்கும். யோசித்துக் கொண்டே இருந்தால் பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படும். இந்த காலத்திலேயே சுப காரியங்களை முடித்துக் கொள்வது நல்லது. குருவின் பரிபூரண அருள் இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.

உத்தியோகத்தில் வெற்றி ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர், புராஜெக்ட் மேனேஜர் போன்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். விரைய ஸ்தானத்தில் குரு இருப்பதால் பிள்ளைகள் பற்றிய கவலைகள் இரண்டு மாதத்துக்கு உண்டாகும். குரு மாறிய பின்னர் மே மாதத்துக்குப் பிறகு சுப காரியங்கள் உண்டாகும். திருமண யோகம், குழந்தை யோகம் உண்டாகும்.

குரு பார்வை இருப்பதால் பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். உங்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும். மனைவி, கணவனின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும், குடும்பத்தில் அதீத மகிழ்ச்சியை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். முதல் இரண்டு மாதம் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+