Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உசைன் போல்டாக மாறும் துலாம் ராசியினர்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.

2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

Tamil new year Thulam Rasi palan

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில்
கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லா கிரகங்களும் அனுகூலமான நிலையில் உள்ளதால் எல்லா விஷயங்களிலும் ஏற்றத்தை உண்டாக்கும். அபிராமி அந்தாதி கேட்பது, 40, 59, 75 பாடல்களைப் படிப்பது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடுதலையைத் தரும். நினைச்சதை சாதிக்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மீண்டும் இது மாதிரியான காலகட்டம் அமைவதற்கு வாய்ப்பில்லை. அருமையான நல்ல நேரமாக உள்ளது.

குரு பார்வை துலாம் ராசி மீது விழுவதால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வண்டி வாகனம் மாற்றம் உண்டாகும். 5 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் இரண்டு மாதத்துக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம். கணவன், மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனை ஏற்படும். மே மாதத்துக்குப் பிறகு ஜாக்பாட் உண்டாகும்.

பெற்றோர் பெரியோர் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அடிவயிறு, முதுகு வலி, அலர்ஜி, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். வெயில் மற்றும் வெப்பம் காரணமாக கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் அனைத்திலும் நிவர்த்தி ஏற்படும்.

உத்தியோகத்தில் பெரிய அளவில் முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் தூக்கமின்மை ஏற்படும். பெரிய தலைவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் நீங்கும். நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். எல்லா பிரச்சனைகளையும், சவால்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக போராடிய விஷயங்களில் எல்லாம் இனி ஜெயம் ஏற்படும். வெற்றிகளைக் குவிக்கும் நேரமாக உங்களுக்கு இருக்கும். தைரியம், நம்பிக்கை, புத்துணர்ச்சி பிறக்கும்.

குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கான காலகட்டாக இருக்கும். அடுத்தடுத்து அனுகூலம் காணப்படும். புதிதாக வீடு கட்டுவது, வீடு கட்டுவதற்கான திட்டம் போடுவது, இன்டீரியர் விஷயங்களைச் செய்வது என்று எல்லாவிதத்திலும் ஏற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் அபிவிருத்தி ஏற்படும். அனுகூலமான சூழ்நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெரியோர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களுடன் மனம்விட்டுப் பேசுவது நன்மைகளைத் தரும். தஞ்சாவூரில் உள்ள பட்டீஸ்வரம் துர்கை வழிபாடு நல்ல பலன்களைத் தரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். அம்மா, அப்பா, பிள்ளைகளுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். அபரிமிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும் காலகட்டமாக இருக்கும். தொழில்களில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+