தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு டபுள் தமாக்கா.. இரட்டிப்பாகும் உங்கள் வருமானம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் (Magaram Rasi Palan)
மகர ராசியினருக்கு இந்த ஆண்டு தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகம் உண்டு. குருவின 7 ஆம் பார்வை கிடைப்பதால் இதுநாள் வரை ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் நீங்கும். நிறைய பேசுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள். சகோதரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாதகாதிபதி 3 ஆம் ஸ்தானத்தில் அமர்வதால் இளைய சகோதரருக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது.

வருமானம்
இளைய சகோதரர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை, கூடுதல் வருமானம் கிடைக்கும். வருமானம் கூடும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி தொடங்குவது, பிசினஸ் கன்ஷல்டிங், கம்யூனிகேஷன் செக்டாரில் வேலை கிடைப்பது போன்ற அமைப்பு உள்ளது.
திருமணம், கார்
உங்களுடைய கருத்துகளைப் பதிவிடும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய கார் வாங்கும் யோகம் உண்டு. திருமணம் கைகூடி வரும். நிறைவான வாழ்க்கையைப் பெறக்கூடிய அற்புதமான ஆண்டாக இருக்கும். நித்திய கல்யாண பெருமாளை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். இதுநாள் வரை உங்கள் உழைப்பிற்கு கிடைக்காத பலன்கள் இனி கிடைக்கும்.
கவனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குருவின் பார்வை இருப்பதால் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். கெரியரில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு வேலை கிடைக்கும். உங்களுடைய கனவுகள் நிறைவேறும் ஆண்டாக இருக்கும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும், வளர்ச்சியும் நன்றாக இருக்கும். தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆசைப்பட்ட அனைத்து விஷயங்களையும் அடையம் யோகம் உண்டு. கடந்த 8 வருடமாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். வரும் குருபலன் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். ராசியை குரு பகவான் உச்சமடைந்து பார்க்கிறார். உடலும், மனதும் தெளிவடையும். மன அழுத்தம், நோய், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டு வருவீர்கள்.
குரு பார்வை
3 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கிறார். அங்கு சனி பகவான் மறைந்திருக்கிறார். ராசிநாதன் மறைந்திருந்தாலும் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை உண்டாகும். நல்ல முடிவுகளை எடுத்து வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். லாபம் அபரிமிதமானதாக இருக்கும். இழந்த செல்வங்கள் எல்லாம் தேடி வரும். நீங்கள் இழந்த வேலை, குடும்பம், உறவுகள், நண்பர்கள் என எதை எல்லாம் இழந்தீர்களோ அவர்றை எல்லாம் அடைவீர்கள்.
திருமணம் உள்ளிட்ட அனைத்து விதமான சுபகாரியங்களும் செய்வதற்கான அற்புதமான காலகட்டம். உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடம்பை பாதிக்கும், மனதை பாதிக்கும் செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது. பேராசைப்படக் கூடிய நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications