தை மாத பலன் 2026: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டத்தை அள்ளும் கன்னி

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-month

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

கன்னி தை மாத ராசி பலன் (Kanni)

கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய காலகட்டம். ராஜா மாதிரி வாழப்போறீங்க. உங்களுடைய பிள்ளைகள் கொடிகட்டிப் பறக்கும் யோகம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் பெரியளவில் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். நிறைய போட்டிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வீடு, நிலம், இடம் வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.

பணம் குவியும் யோகம்

பணம் குவியக்கூடிய யோகம் ஏற்படும். மற்றவர்கள் உங்களை எதிர்க்கவே பயப்படுவார்கள். உங்களிடம் வந்து சரணாகதி அடைவார்கள். மற்றவர்களுக்கு பயத்தைக் கொடுக்கக்கூடிய நிலை வரும். பின் முதுகு, பின்பகுதி, காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது.

வாய்ப்புகள் தேடி வரும்

வாழ்க்கையில் இதுபோன்ற நல்ல நேரம் இனி வரவே வராது. அந்த அளவுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பூர்வீக சொத்துகள் சார்ந்த பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் நீங்கும். லீடர்ஷிப், கேப்டன்ஷிப் வந்து சேரும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

வழிபாடு

நம்பிக்கை பலமடங்கு உயரும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். ஒரு விஷயத்தை நீங்கள் ஆரம்பித்தால் அதில் ஜெயிக்கக்கூடிய யோகம் ஏற்படும். சிந்தனை தெளிவடையும். இதயம் தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+