Rasi Palan This Week: துலாம் ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. உங்க காட்டுல மழைதான்
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டம். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அனுகூலமான சூழ்நிலையும், சந்தோஷமும் ஏற்படும். இழுபறியாக இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் காலகட்டம்.
யோகம் கொட்டும்
யோக பலன்கள் உங்களுக்கு அதிக அளவில் கிடைக்கும். ரத்த பந்த உறவுகளால் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். கஷ்டங்கள், நிம்மதியற்ற தன்மைகள் எல்லாம் மாறும். குடும்பத்தில் துணை, பிள்ளைகள், உறவுக்காரர்களிடமும் அனுகூலம் ஏற்படும்.
மாற்றம், முன்னேற்றம்
கிரகங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும் காலகட்டம், தொழில், இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், படிப்பு மாற்றம் என எந்த மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் பெரிய லாபம், பெரிய வெற்றி காணும் சூப்பர் காலகட்டம்.
திருமண தடை நீங்கும்
திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை எல்லாமே தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பற்கள் பிரச்சனையில் அதீத கவனம் தேவை. குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். வெற்றியைக் குவிக்கும் காலகட்டம். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications