விருச்சிக ராசிக்கு 3 விஷயங்கள் நடக்கப்போவது நிச்சயம்.. ஆடி மாதத்தில் வரும் அதிரடி மாற்றம்
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம் ஆடி மாத பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 3 முக்கியமான பலன்கள் இந்த ஆடி மாதத்தில் கிடைக்கப் போகின்றன. இதுவரை 7 ஆம் வீட்டு அதிபதியின் நேரடி பார்வை இருந்து வந்தது. இதனால், கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், பொறுப்பு, புரிதல் அதிகமாக இருந்திருக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அனைத்தும் கிடைத்திருக்கும். ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு 7 ஆம் வீட்டு அதிபதி 8 இல் அமர்ந்து 2 ஆம் வீட்டைப் பார்க்கிறார். இதனால், சிறு சிறு அவமானங்கள், எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போவது போன்றவற்றை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
கவனம்
வண்டி, வாகனங்களில் செல்லும்போது அதீத கவனமாக இருப்பது நல்லது. துணையின் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது. பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். மூச்சு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இயங்கும். மூச்சுப் பயிற்சி செய்யலாம். அல்லது மூச்சு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பணவரவு
2 ஆம் இடத்திற்கு 7 ஆம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் அமர்ந்து பார்வை செய்கிறார். 10 இல் கேது ராசிநாதனுடன் சேர்ந்திருக்கிறார். இதனால், மன அழுத்தம், தேக்கநிலை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த விஷயங்கள் தேங்கும் நிலை வாய்ப்புள்ளது. தொழிலில் பணம் சிக்கும் வாய்ப்பு, பணம் தேங்குவது போன்ற நிலைகள் உண்டாகும். 2 ஆம் வீட்டிற்கு குரு பார்வை, 7 ஆம் அதிபதியின் பார்வை இருப்பதால் துணைக்கு பண வரவு அதிகரிக்கும். உங்களுக்கு மட்டும் சுணக்க நிலை உருவாகும்.
3 விஷயங்கள்
7 ஆம் அதிபதி 8 இல் அமர்ந்து 2 ம் வீட்டை பார்வையிடுவதால் வீட்டுக்குள்ளேயே வம்பு, வழக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. துணையின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையில் ஆளுமையை வெளிப்படுத்துவீர்கள். அதன் மூலம் வேலை பார்க்கும் இடத்தில் சில சில சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் அதிர்ஷ்டம், நல்ல செய்தி, டிரான்ஸ்பர், இடமாற்றம் போன்றவை உண்டாகும். ஆவணங்கள் சார்ந்த பிரச்சனை, தகவல் தொடர்பில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில்
சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வரும். வரவு செலவு கணக்கை எல்லாம் சரிபார்க்கும் நேரமாக இருக்கும். குருமார்கள் வழிபாடு, தந்தை ஆசிர்வாதம் கிடைக்கும். குலதெய்வத்துக்கு மாவிளக்கு போடுவது, குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது உங்களுக்கு வரும் தடைகளை அனைத்தும் நீக்கும். பயணம், தொழிலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக வந்து சேரும். படிக்கும் குழந்தைகளுக்கு ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல காலகட்டமாக இருக்கும்.
வருத்தம்
20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இனம்புரியாத வருத்தம், ஏக்கநிலை ஏற்படும். மன ரீதியான குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. வாகன விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செய்யாத தப்புகளுக்கு உங்கள் மேல் பழி வரும். தேவையில்லாத அசிங்கம், அவமானம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.
வழிபாடு
காவல் தெய்வ வழிபாடு, வாராஹி வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications