Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு 2 இல்ல 4 லட்டு திண்ணும் யோகம்.. தொட்டதெல்லாம் இனி சக்சஸ்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-weekly-rasi-palan-what-kind-of-benefits-viruchigam-rasi-people-will-get-from-september-8

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூரியனின் ஆதிக்கம் இருப்பதால் மேன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த அனுகூலங்கள் காணப்படும். நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய்க்கு தீபமேற்றி வழிபடுவது பூமி வாங்குவது, விற்பது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.

தடைகள் நீங்கும்

பூமி தொடர்பான விஷயங்களில் இருந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும் காலகட்டமாக இருக்கும். மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு உபத்திரவம் இருந்தால் நிச்சயமாக மன அழுத்தம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். மேலதிகாரிகளின் நம்பிக்கை உரியவர்களாக மாறுவீர்கள்.

யோக பலன்

தொழில், உத்தியோகம், படிப்பு, வண்டி வாகனம், பதவி உயர்வு ரீதியாக எல்லாவற்றிலும் கெளரவங்கள் ஏற்படும். யோக பலன்களை அதிக அளவில் பெறும் ராசிகளில் விருச்சிக ராசியினரும் ஒன்று. இதுவரை செய்ய முடியாமல் தாமதமாகிக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.

சிக்கல் தீரும்

கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பற்றக் கூடிய அற்புதமான நேரம். விரையங்கள் எல்லாம் சரியாக இனி மகிழ்ச்சி பெறும் காலகட்டம். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையக் கூடிய அமைப்பு ஏற்படும்.

முன்னேற்றம்

வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சுணக்கங்கள் தீரும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் குறையும். எல்லா விஷயத்திலும் ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படக்கூடிய காலகட்டம். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதாரம் ரீதியாக முன்னேற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் மேன்மை உண்டாகும். யோகமான வாரமாக அமையும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+