விஷ்ணுபதி புண்ணியகாலம் : ஆவணி மாதப் பிறப்பு... கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை: ஆவணி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் பிறந்துள்ளது. ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
சூரியனுக்கு சிம்ம ராசி ஆட்சி வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. ஆவணி மாதம் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க தீராத குடும்ப பிரச்சினைகள் தீரும்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்
தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. இந்த மாதங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை ஆகும். விஷ்ணுபதி புண்ணியகாலமான ஆவணி மாதம் பிறந்துள்ளது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான்.

ஆவணி ஞாயிறு சிறப்பு
இந்த மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஞாயிறு என்றாலே சூரியன்தான். ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். அந்த நேரத்தில் விளக்கேற்றி சூரிய வழிபாடு செய்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது சிறப்பானது.

மகாவிஷ்ணு வழிபாடு
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை செய்யலாம். விஷ்ணு கோவிலுக்கு போக முடியாது என்பதால் நாம் வீட்டிலேயே அந்த நாராயணனை மனதார நினைத்து நம்முடைய வேண்டுதலை கூறி வணங்கலாம்.

பல மடங்கு புண்ணியம்
மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம். இந்த புண்ணிய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயணனின் அருள் நிச்சயம் கிடைக்கும். ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகராஜா கோவில்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலையாள மாதத்தில் சிங்கமாதம் என்று அழைக்கப்படுவது ஆவணி மாதம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்களில் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நிறைபுத்தரிசி பூஜை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெற்பயிர்கள் செழித்தோங்க வேண்டியும், கன்னிப்பூ அறுவடை பணிகள் பரவலாக நடக்கவுள்ளதை முன்னிட்டும் திங்கட்கிழமை கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜைக்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் அறுவடை சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நெற்கதிர்கள் பகவதியம்மன் கோயில் மூலஸ்தான மண்டபத்தில் அம்மன் முன் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்ட பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் நெற்கதிர்களை வாங்கி சென்றனர்.
இதுபோல் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், வேளிமலை முருகன் கோயில் உட்பட நகர, கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை செய்து, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இவற்றை பக்தர்கள் வீடுகள், வர்த்தக நிறவனங்களில் கட்டி தொங்க விட்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications