ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி யோகம்.. குஷியோ குஷிதான்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷப வார ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் மிக்க காலகட்டமாக இருக்கும். மனதில் இருந்து வந்த பாரங்கள் பரிபூரணமாக நீங்கும். காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. வெர்டிகோ, மயக்கம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. கழிவுப் பாதை, வயிறு, அசிடிட்டி தொடர்பான நோய்களில் அக்கறை செலுத்துவது நல்லது.
தடைகள் நீங்கும்
சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். குரு பகவானின் பலம் உங்கள் ராசிக்கு இல்லையென்றாலும் தடைகள் நிவர்த்தியாகும். தொழில், படிப்பு, வியாபாரம், உத்தியோகம் சார்ந்த பயணங்கள் செய்ய நேரிட்டால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. அந்தப் பயணங்கள் மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
படிப்படியான முன்னேற்றம்
குடும்பத்திலும், சமுதாயத்திலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை, புகழ், செல்வாக்கு கூடும். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இழுபறியாக இருந்து வந்த அனைத்து விஷயங்களும் படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் அனைத்துவிதமான நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளிடம் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
தொழிலில் யோகம்
சொந்த தொழில் தனியாக தொடங்குவதற்கான யோகம் உண்டு. அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கூட்டுத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளால் வெற்றி உண்டாகும். அதிக அளவிலான யோகத்தையும், ஆதாயத்தையும் பெறுவீர்கள்.
புதிய வாகனம் வாங்கும் யோகம்
குடும்பத்தில் உங்களுடைய துணையுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் படிப்படியாகத் தீரும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியிடம், தொழில், வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் எடுக்கும் முடிவுகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications