அக்டோபர் 13–18 வரை இந்த 6 ராசிகளுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. பணவரவு, திருமண யோகம் எப்படி?
Rasi palan this week: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 26 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பித்துள்ளது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 26 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு அருமையான காலகட்டம். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். மற்றவர்கள் மூலமாக நிறைய லாபங்கள் கிடைக்கும். சனி வக்கிரமாக இருப்பதால் முடி கொட்டுவது, கால் வலி போன்றவை இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரத்திற்குப் பிறகு நிலைமை சீராகும். நிறைய சந்தோஷங்கள் பார்க்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
குரு வக்கிரமடையும்போது உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். வெளியிடம், தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். நிறைய அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும். பெரிய கெளரவங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். வெளியூர், வெளிநாடு என இனிமையான பயணங்களை மேற்கொள்வீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.
நிலம், வீடு வாங்குவதற்கான யோகம் ஏற்படும். வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கணினி, செல்போன் வாங்கும் யோகம், வீட்டில் இன்டீரியர் டெக்கரேஷன் போன்றவற்றை செய்யும் அமைப்பு உள்ளது. தொலைதூரத்தில் இருந்து நிறைய நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் பெயர், புகழ் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தில் புதிய கெளரவம் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும்.
ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் துணை விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அந்நியர்கள் உங்கள் குடும்ப விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும்.
தொழிலில் நன்றாக கவனம் செலுத்துவது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். சூரியன் 6 இல் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். நீச்சபங்க ராஜயோகம் ஏற்படும். மருத்துவர்களுக்கு பெரிய கெளரவம் உண்டாகும். மீடியா, மருத்துவத் துறை, சினிமாவில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். நல்ல பெயர், புகழ் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரமாக அமையும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் உள்ளது. புதிய முயற்சிகளில் ஜெயிக்கும் அமைப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அரசியல் சம்பந்தப்பட்ட தொடர்புகள் உண்டாகும். நல்ல பேச்சுவாரத்தைகள் ஏற்படும். மத்திய அரசு வேலை கிடைக்கும் அமைப்பு உள்ளது. பஞ்சம ஸ்தானம் அருமையாக இருப்பதால் எல்லா காரியங்களையும் தீர்க்கமாக நின்று வெற்றி பெறுவீர்கள்.
5 ஆம் இடம் நன்றாக இருப்பதால் நின்று ஜெயிக்கும் அமைப்பு. புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பது பெரிய யோகத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மனைவி ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். மாதவிடாய் பிரச்சனை, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை போன்றவை ஏற்படும். தூர தேச பயணங்கள், வெளியூர் பயணங்கள் ஏற்படும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. விரயங்கள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் தீரும். இதுவரை இருந்து வந்த மரண பயங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். திருமண யோகம் உண்டாகும். காதல் கைகூடும். காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இன்னொரு காதல் கிடைக்கும். முதியவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் ஏற்படும். இயற்கையாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும்.
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அனுகூலமும், யோகம் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் வக்கிரமாக இருக்கிறார். டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில் போன்றவை பழுதாக இருந்தால் வெளியில் வீசுவது, அல்லது பழுது பார்த்துக் கொள்வது நல்லது. சொந்த பந்தங்கள், பெண்ணின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ஒரு சிலரின் குடும்பத்தில் நல்ல காரியம் நடப்பதற்கான அழைப்புகள் தேடி வரும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் சரியாகும். கழுத்து தொடர்பான பாதிப்புகள் வந்து சரியாகும். மாமனாரின் ஆரோக்கியத்தில் அக்கறை, கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வரும் 15 ஆம் தேதியில் இருந்து மிகப்பெரிய நல்ல யோகங்கள் கிடைக்கும். ஆன்மீகம், தெய்வீகம், சித்த புருஷர்களின் ஆதரவு கிடைக்கும். திருமாணகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். குரு கேது சேரக்கூடிய காலகட்டத்தில் கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.
பெரியவர்களின் மூலமாக சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு சொந்த வீடு அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 15, 16, 17 ஆம் தேதிகள் அற்புதமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் தீரும். மன வருத்தங்கள் நீங்கும்.
பல், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உணவால் வரும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் ஜெயிப்பீர்கள். சுக்கிரன் வக்கிரமடைவதால் ஆன்லைன் கம்யூனிகேஷன், டெலிபோன் கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும். மீடியாவில் இருப்பவர்கள் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குடும்ப ஸ்தானத்துக்கு பலம் பெறக்கூடிய காலகட்டம். சுக்கிரன் வக்கிரமடைவதால் பழைய பணங்கள் வந்து சேரும். வராத பணங்கள் வரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியம், ஆயுள் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
நிறைய பேர் புதிதாக ஏதாவது வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். தொடர்ந்து ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. வாரத்தின் இரண்டாம் பாதியில் இருந்து நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மனமே மிகுந்த சந்தோஷத்துடன் காணப்படும்.
சுக ஸ்தானத்துக்கு சந்திரன் போகும்போது நிறைய சந்தோஷம் ஏற்படும். சுற்றுலா செல்வதற்கான யோகம் பெறுவீர்கள். கோயில்கள், தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்லம் அமைப்பு உள்ளது. உங்கள் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் அமோகமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும்.


Click it and Unblock the Notifications
